இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய முனையத்திற்கு அருகில் கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிந்த பறவை கூட்டத்தை விரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
எதிர்பாராத விதமாகக் குறித்த துப்பாக்கிச் சூடு விமான நிலைய விலங்குகள் மற்றும் பறவைகளின் ஆபத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பயணித்த கெப் வாகனத்தின் மீது விழுந்து வெடித்துள்ளது.
இதனால் கெப் வாகனத்திலிருந்த ஏனைய வெடிபொருட்களும் வெடித்துச் சிதறியுள்ளன.இதன்போது கெப் வாகனத்திலிருந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்கை்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.