சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முறையை பா.ஜ.க அரசு அமல்படுத்தவிருப்பதாக சில உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. செப்டம்பர் மாதம் 18 முதல் 22-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஐந்து அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார். இந்த
தற்போதுவரை, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என மூன்று வகைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இது தவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சித் தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த முழக்கம் 2018-ம் ஆண்டு முதல் வேகமாக ஒலித்துவருகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தல் செலவுகளைக் குறைக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக அடிக்கடி நிர்வாக அமைப்பின் பணிகள் தடைபடுகின்றன. இந்த இரண்டு தேர்தல்களைச் சேர்த்து நடத்துவதன் மூலம் நிர்வாகத் திறனை மேலும் அதிகரிக்க முடியும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நடைபெறும் அந்த மாநிலத்தில் அமல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதுவே ஒரே தேர்தலாக நடத்தினால் இது போன்ற இடையூறுகள் ஒருமுறை மட்டுமே ஏற்படும். மேலும், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையானது வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்’ என்று மத்திய பா.ஜ.க அரசு விளக்கமளித்திருக்கிறது.
ஓர் ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஓர் ஆட்சியைக் கலைக்க முடியாது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்த திட்டத்துக்காக அரசைக் கலைத்தால் தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
இது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான காலச்சூழல் இருப்பதில்லை. மேலும், இயற்கைப் பேரழிவு, மழை வெள்ளம் போன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டால், அந்தப் பகுதி மக்களுக்கு வாக்களிப்பது பெரும் சவாலாக மாறும். மக்களின் சூழலையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்தியா பல மாநிலங்களால் ஆன நாடு. எனவே, மாநிலப் பிரச்னைகளுக்கான முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மையுடையது.
சில மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்கள், பல மாநிலங்கள் புறக்கணித்துவிடும். எனவே, மாநிலத்தின் தனித்தன்மையைத் தொடர்ந்து பாதுகாக்க அவர்களின் உரிமைக்கான போராட்டத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கிறது. `ஒரே நாடு ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்னைகளுக்கான முக்கியத்துவம்தான் அதிகரிக்கும். மாநில அரசின் கோரிக்கைகள் கண்டுகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தேசியக் கட்சிகள் நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள பண பலத்தை வைத்திருக்கின்றன. ஆனால், மாநிலக் கட்சிகளின் நிலை அப்படி இருப்பதில்லை.
எனவே, தேர்தலை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் சட்டமன்றத்தில் வெற்றிபெறும் அதே கட்சியை, 77 சதவிகித மக்கள் நாடாளுமன்றத்துக்கும் தேர்தெடுப்பார்கள். ஆனால், இதே ஆறு மாத இடைவெளியில் தேர்தல் நடத்தப்பட்டால் 61 சதவிகித மக்கள்தான் ஒரே கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள் என 2015-ம் ஆண்டு IDFC நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்ட விதிகளை உருவாக்குதல், அதை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக விவாதித்து பரிந்துரைக்க இந்திய சட்ட ஆணையக்குழு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், அரசியலமைப்பின் தற்போதைய கட்டமைப்புக்குள் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முறை பின்பற்றப்பட வேண்டுமானால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் தொடர்புடைய விதிகள் உள்ளிட்ட குறைந்தபட்சம் ஐந்து சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமாகும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய நாடாளுமன்ற முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி.ஆச்சாரி, ” `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமாக வேண்டுமானால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் கலைப்பது, மாநில சட்டமன்றங்களைக் கலைப்பது, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் நேர்கோட்டில் கொண்டு வருவதே மிகப்பெரிய சவாலான விஷயம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்னைகளுக்கான முக்கியத்துவம்தான் அதிகரிக்கும். மாநில அரசின் கோரிக்கைகள் கண்டுகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.”
இவை அனைத்தையும் கடந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டம் சாத்தியமாகுமா என்பதை எதிர்வரும் அரசியல் நிகழ்வுகள் மூலம்தான் தெரியவரும்.!