மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்தியக் கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா என்று காட்டமாகக்கேள்வி எழுப்பியு ள்ளார்.
மத்திய அமைச்சர் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திவிட்டதாகவும், பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா என்றும் முதலமைச்சர் கேள்விஎழுப்பியுள்ளார்.
பி.எம்.ஸ்ரீ ஒப்பந்தத்தில் உள்ள தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்த நிலையில், அதை குறிப்பிட்டு தர்மேந்திர பிரதான் தமக்கு கடிதம் எழுதியதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.