சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும்.விஜய் ஆண்டனியின் மகள்16 வயதான மீரா. நேற்று இரவு மூன்று மணி அளவில் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். பணியாளர்கள் உதவியுடன் மீராவை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இசையமைப்பாளருமான நடிகருமான விஜய் ஆண்டனி அவரின் ரசிகையான பாத்திமாவை காதல் திருமணம் செய்தவர். பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.