சிறுநீரகத்தில் அதிகமான தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர்
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும்
பெரும்பாலான சமயங்களில் இதற்கு எந்த அறிகுறியும் இருக்காது. ஸ்கேன் எடுக்கும்போதுதான் தெரியவரும். சிலருக்கு சிறுநீர் வெளியாகும்போது அதில் கல்லும் வெளியேறும். அப்போது வலி ஏற்படும். அந்த வலி பின் வயிற்றிலிருந்து பரவி வரும். சிலருக்குச் சிறுநீரில் ரத்தமும் வெளியேறலாம்.
உலகிலேயே மிகப் பெரிய சிறுநீரகக் கல்லான 801கிராம் எடையுடன் கூடிய 13.37செ.மீ. நீளமுள்ள சிறுநீரகக் கல் இலங்கைராணுவத்தில் பணியாற்றிய ஒருவருக்குஅகற்றி உள்ளனர்.
1. பத்து மில்லி எலுமிச்சைசாறை 200 மில்லி வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து சாப்பிட, சிறுநீரகக் கழிவுகள்
முழுமையாக நீங்கும். மீண்டும் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
2. ஆப்பிள் சிடார் வினிகர், இது சிறுநீரகக் கற்களுக்கு வழங்கப்படும் முக்கியமான மருந்தாகும். 30 மில்லி ஆப்பிள் வினிகரை, 300 மில்லி வெந்நீருடன் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். நூறு நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக மண்டலத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சீராகும்.
3. வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கிச்சாறு தலா 100 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்தோ தனித்தனியாகத் தொடர்ந்து சாப்பிடச் சுண்ணாம்பு கற்கள் வேகமாகக் கரையும்.
4. ஐந்து கிராம் கொள்ளுப் பொடியை, 300 மில்லி தண்ணீருடன் கலந்து 100 மில்லியாக குறுகும்வரை கொதிக்கவைக்க வேண்டும். அதனை வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடம் முன்னால் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக மண்டலத்தில் ஏற்படும் வலிகள் வேகமாகக் குணமாகும்.
5. மூக்கரட்டை, சிறுபீளை, நெருஞ்சில் ஆகியவற்றை தலா 5 கிராம், பட்டை 2 கிராம் எடுத்து 300 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, 100 மில்லியாக குறுக்க வேண்டும். அதனை வடிகட்டி காலை, இரவு உணவிற்கு 30 நிமிடத்துக்கு முன்னால் பருகினால் கற்கள் வேகமாகக் கரையும். கற்கள் மீண்டும் உருவாகாமலும் பாதுகாக்க முடியும்.
6.பீன்ஸ் விதை நீக்கி 2 லீட்டர் நீரை ஒரு லிட்டராக வரும் வரை வேக வைத்து வடித்து குடிக்கவும்.
சிறுநீரகக்கற்கள் வராமல் தடுப்பதற்கு உணவை முறைப்படுத்துவதுதான் ஒரே வழி. பிரதானமாக உப்பு. நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது. நிறைய தண்ணீர் பருக வேண்டும். புரதச்சத்துக்காக இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை விட பயிறுகள், பருப்பு உள்ளிட்ட சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், என்று சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.