இன்றைய தினம் (6) இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்று சீனதூதுவர் பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.! சீன தூதுவரி யாழ் விஜயத்தின் நோக்கம் என்ன? யாழ் பழையகச்சேரி சீனாவிற்குவிற்கப்பட்டு விட்டதா? இனிமேல்தான் விர்கப்படப்போகிறதா?
சீனததுதுவர். நான் வடக்கு மாகாணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வந்துள்ளேன்.சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.
யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேத்திற்கு விஜயம் செய்து சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்ததுடன்.சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.
கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும்.உணவு பொதி 7000 ரூபாய் பெறுமதியானது.
உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள்.
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது.சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.
15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது. 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.
சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.
சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செயவதற்கு ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என்றார்.
சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன்” என்றார்.
இதேபோன்று மாவட்டத்தின் பல இடங்களிலும் அடுத்த கட்டங்களாக உலர் உணவுப்பொதிகளை தூதுவரே நேரடியாக வழங்கி வைக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சீன நாட்டு தூதரக அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அதனைதொடர்ந்து, யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
சீன தூதுவரி யாழ் விஜயத்தின் நோக்கம் என்ன? யாழ் பழையகச்சேரி சீனாவிற்குவிற்கப்பட்டு விட்டதா? இனிமேல்தான் விர்கப்படப்போகிறதா? எனும்கேள்வி எழும்பியுள்ளது.