கார்த்திகை பூ விடுதலைப்புலிகளின் அடையாளங்களான சின்னங்கள், எவற்றையும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நகுலன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நேற்று(19) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரமான ச. கீதனும் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விடுதலைப்புலிகளின் அடையாளங்களான சின்னங்கள், எவற்றையும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாகவும், குறிப்பாக கார்த்திகை பூவை பயன்படுத்தக் கூடாது என்று தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும். ஆனாலும் தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நகுலன் தெரிவித்தார்.