கொழும்பில் 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை செய்யுமாறு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துமாறு சட்டமா அதிபரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
30 ஆபிரிக்க பிரஜைகள் நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிசறை வெளிநாட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களை மீள ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், அவர்களின் வெளிநாட்டு பயணத்தடையை நீக்கவும் உத்தரவிட்டார்.