இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழு இந்த விவகாரம் தொடர்பாக தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அறிக்கையின் பரிந்துரைகளின்படி செயற்படவும் சமர்ப்பித்த அவதானிப்புகளின் அடிப்படையில் வரைவு செய்யப்பட்ட உடன்படிக்கையில் கையொப்பமிடவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவையும் இணக்கம் தெரிவித்துள்ளது.