Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவஞானம் சிறீதரனுக்கு வாழ்த்து!

Stills by Stills
26/01/2024
in இலங்கை
0
சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவஞானம் சிறீதரனுக்கு வாழ்த்து!
0
SHARES
7
VIEWS
ShareTweetShareShareShareShare

 

“புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறீதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகிறோம்.

 

 

விடுதலைப் புலிகள் ஆயுதப்போராளிகளாக செயற்பட்ட வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழிமுறையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தினை முன்னெடுத்து.இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் செயற்பட்டு வந்தார்கள்.

தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு, இராஜவரோதயம், ராசமாணிக்கம், வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரால் தலைமை தாங்கப்பட்டு, தமிழ் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள்.

தமிழரசுக் கட்சி தனித்து நின்று, தனது கோரிக்கைகளை வெல்ல முடியவில்லை என்ற காரணத்தினால் இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய பாரம்பரியமும் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 1976ஆம் ஆண்டிலிருந்து தனது கட்சியான தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதே தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஓர் ஐக்கிய முன்னணி என்பதை தந்தை செல்வா அடையாளம் காட்டினார்.

அதன் பின்னர், 1985 ஆம் ஆண்டில் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழப்புரட்சி அமைப்பு ஆகியோர் இணைந்து திம்பு கோட்பாடு எனப்படும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதுவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடைப்படையாகக் கொள்ளப்படுகின்றது. 2002ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்பட்டு வந்தனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சி புத்துயிர் பெற்று ஐக்கியத்துடன் முன்னேறட்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு வாழ்த்து தெரிவித்து

சம்பந்தனால் தலைமையேற்று நடாத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவிய பல்வேறு முரண்பாடுகள் காரணமாக அதில் இணைந்திருந்த பல கட்சிகளும் தனிநபர்களும் வெளியேறியது மாத்திரமல்லாமல், இறுதியில் 2023ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர்களும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்கள். அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்துள்ளது.இந்த நிலையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகியோர் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு யாப்போ அமைப்பு வடிவமோ இல்லாத காரணத்தால் கூட்டமைப்பிற்குள் பல்வேறு முரண்பாடுகள் அவ்வப்போது தோற்றம் பெற்றது. இவற்றை நிவர்த்தி செய்யும்பொருட்டு, நாம் உருவாக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்காக ஒரு யாப்பு வரையப்பட்டிருக்கின்றது.

அது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டும் இருக்கின்றது. இந்தக் கூட்டணிக்கென்று குத்துவிளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி, யாப்பின் அடிப்படையில் நிறைவேற்றுக்குழுவையும் கட்சிக்கான கட்டமைப்பையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலத்தின் தேவை கருதி, 2002ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் அங்கம் வகித்த பல்வேறு கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கைகளை வைத்தபோதும் தமிழரசுக் கட்சி அதற்கு செவிசாய்க்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22வருட காலமாக தமிழ் மக்களுக்காகப் போராடும் ஒரு அரசியல் கட்சியாக தன்னை நிறுவனப் படுத்திக்கொள்ளாமல், தேர்தல் காலங்களில் கூட்டாகவும் பின்னர் தமிழரசுக் கட்சியாக முடிவெடுத்துச் செயற்படுவதுமே இன்றுவரை தொடர்கின்றது. இதன் காரணமாகவே இடைப்பட்ட காலங்களில் பல கட்சிகளும் அதிலிருந்து வெளியேறின.

இந்த நிலையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திரு. சிவஞானம் சிறிதரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோரை ஒன்றிணைத்து 2009ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஒருவலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான சிந்தனையுடன் பயணிக்கின்றது.

இதன் அடிப்படையில்தான் ஒரு வருடத்திற்கு முன்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டு, அது இன்றுவரை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில்,  புதிய அமைப்புகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து, ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணியில் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.”“புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறீதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகிறோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: சிறீதரனுக்குசுரேஷ்பிரேமச்சந்திரன்வாழ்த்து
ShareTweetShareShareSendSend
Previous Post

இலங்கையில் இருந்து இளையராஜாவின் மகள்பவதாரணியின் உடல் விமானத்தில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் 

Next Post

முன்னாள் விமான போக்குவரத்துறை அமைச்சர் குடும்பத்துடன் தொடருந்துக்கு பயணியாக காத்திருப்பு.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
முன்னாள் விமான போக்குவரத்துறை அமைச்சர் குடும்பத்துடன் தொடருந்துக்கு  பயணியாக காத்திருப்பு.!

முன்னாள் விமான போக்குவரத்துறை அமைச்சர் குடும்பத்துடன் தொடருந்துக்கு பயணியாக காத்திருப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.