இலங்கையின் காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டு குறித்த இணையத்தளம் வேறு வெளி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவி விட்டது .இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் முழுவதும் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு விரிவான உத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு தெரிவித்திருந்தது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் யூடியூப் தளத்தில் தற்போதைக்கு ‘Brad Garlinghouse’ எனும் பெயர் கொண்ட வேறொரு தரப்பின் காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் சுமார் 83 ஆயிரம் பின்பற்றுபவர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.