அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். உக்ரைன் – ரஷியா போரை மட்டுமே இதுவரை என்னால் நிறுத்த முடியவில்லை.
இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன். நீங்கள் 1 கோடி பேரை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ததாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதப்போரை நிறுத்தி விட்டதாகவும் அமெரிக்க ஜனாதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையேமோதல் ஏற்பட்டது 3 நாட்கள் நடந்த மோதலின்போது இரு தரப்பிலும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் சண்டை முடிவுக்கு வந்தது.இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ததாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதப்போரை நிறுத்தி விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபத்தி இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், துப்பாக்கி தோட்டாக்களுக்கு பதிலாக வர்த்தகத்தை கொண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப்போரை நிறுத்தியதில் நான் பெருமைபடுகிறேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதுபற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆனால் தற்போது இரு நாடுகளும் அமைதியாக சிறப்பாக செயல்படுகின்றன’ என்றார்.இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு நான் தான் காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக கூறி பெருமிதப்பட்டுக்கொண்டார்.




















