உங்களுக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்பட்டால், உங்கள் உணவுமுறையை மேம்படுத்துவதன் மூலம் வலியையும் வீக்கத்தையும் குறைக்கலாம். “மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க அழற்சி எதிர்ப்பு உணவுகள் மிகவும் அவசியமாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ‘D’ மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் உங்கள் மூட்டுகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.
1.தேங்காய் பூ –
தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. தேங்காய் பூவில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை சீர்செய்வது, மற்றும் இதயத்தை பாதுகாப்பது போன்ற பல அரும்பெரும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
தேங்காய் பூவில் காப்பர், அயன், ஜிங்க் அதிகமாகவே இருக்கிறது. அதனால் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக்குகிறது. கொழுப்பு அமிலம் குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் நல்ல கொலஸ்ட்ரால் நம் உடம்புக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் செல்களைப் பாதுகாத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை பலமடங்கு உயர்த்துகிறது.
செரிமானம் மற்றும் இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
எடை பராமரிப்பு இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணrவைத் தருவதால், பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் சீராக வைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பாதுகாக்கிறது
இதில் செலினியம் மற்றும் ஒமேகா 3,ஒமேகா 6 சத்து அதிகமாக இருப்பதால் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு கண் கருவளையம் வருவதும் தடுக்கப்படுகிறது தினமும் இவற்றை எடுத்துக் கொள்ளும் போது என்றும் இளமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தலைமுடி கருகருவென ஆரோக்கியமான வளர்ச்சியை பெற்றிருக்கும்.
தேங்காய் பூவில் பிரக்டோஸ் அளவு அதிகமாகவும் சுக்ரோஸ் அளவு குறைவாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த இயற்கை உணவாகவும் உள்ளது.
இளநீரை விட அதிக அளவு சத்து தேங்காய் பூவில் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுத்து பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் முதல் ஸ்கின் புற்றுநோய் வரை வராமல் தடுக்கிறது.அதுமட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் வெள்ளைப்படுதல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
தேங்காய் பூவை ரத்த அழுத்தம் உள்ளவர்களும் உட்கொள்ளலாம். தேங்காய் பூவில் காப்பர் ,இரும்புச்சத்து, சிங்க் போன்ற ரத்த உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் இருப்பதால் ரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் போது உடல் சோர்வு குறைந்து புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.கொழுப்பு நம் உடம்பில் தங்காமல் மலம் மூலமாக வெளியேற்றிவிடும்.மாரடைப்பு வராமல் தடுக்கும்.
தேங்காய் பூவில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சிறுநீர் நோய் மற்றும் சிறுநீரக தாரையில் தொற்றி ஏற்படாமல் பாதுகாக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் உற்பத்தியை சீராக்கி மாதவிடாய் ஒழுங்கு படுத்துகிறது.
தைராய்டு பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்ளலாம்.
ஆண்களின் ஆண்மை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தேங்காய் பூ முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான ஜிங்க் (Zinc) மற்றும் அமினோ அமிலங்கள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. முற்றிய தேங்காயை ஒரு சாக்கு பையில் போட்டு அதில் சிறிதளவு மண் மற்றும் தண்ணீரை சேர்த்து காற்று போகாமல் இறுக்கி கட்டி வைத்து விட வேண்டும். இவை இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை பூவாக மாற எடுத்துக் கொள்ளும் காலம்.
2.முடவாட்டுக்கிழங்கு-
ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்குமாம். மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகையாக கூறப்படுகிறது.
3.சால்மன்-
சால்மன் மீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தை அதிக அளவில் வழங்கும் ஒரு கொழுப்பு நிறைந்த மீன் ஆகும். ஒமேகா-3 அடங்கிய மீன் எண்ணெய், மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். சால்மன் மீனைத் தவிர, ஹெர்ரிங் மற்றும் மத்தி போன்ற ஆழ்கடல் மீன்களிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தைக் காணலாம். உங்கள் அழற்சியைக் குறைக்க, நீங்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் ஐந்து முறை மீன் சாப்பிடலாம்.
4.இஞ்சி-
இஞ்சியில் உள்ள முக்கிய மூலப்பொருள் ஜிஞ்சரால் ஆகும். அதிக அளவு ஜிஞ்சராலை உட்கொள்வது முழங்கால் வலியை, குறிப்பாக மூட்டுவலியால் ஏற்படும் வலியைப் போக்க உதவும்.
5. மஞ்சள்-
மஞ்சளை உட்கொள்வதால் முதுமை மற்றும் முடக்கு வாதம் போன்ற நோய்களால் ஏற்படும் மூட்டுச் சிதைவிலிருந்து குர்குமின் மூட்டுகளைப் பாதுகாக்கும்.
6. அன்னாசிப்பழம்-
அன்னாசிப்பழத்தில் புரோமெலைன் என்ற சேர்மம் இருப்பதால், அது மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது. கீல்வாதம் உள்ளவர்களுக்கு புரோமெலைன் ஒரு சிறந்த வலி நிவாரணியாகும். இது முடக்குவாதத்துடன் தொடர்புடைய அழற்சியையும் குறைக்கக்கூடும். உங்களுக்கு அன்னாசிப்பழம் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், புரோமெலைன் நிறைந்த மற்றொரு பழமான பப்பாளியைச் சாப்பிடலாம்.
7. மிளகாய் (காரமான மிளகு)-
கார மிளகாய்களில் கேப்சைசின் எனப்படும் ஒரு கூறு உள்ளது. இது வலியைப் போக்கவும், அழற்சியைக் குறைக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.




















