Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின், ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மிக முக்கிய முழுமையான வாக்குமூலம்

Stills by Stills
06/09/2023
in இலங்கை
0
பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின், ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மிக முக்கிய முழுமையான  வாக்குமூலம்
0
SHARES
212
VIEWS
ShareTweetShareShareShareShare

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம்

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு 3 நாட்களுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எங்களை ஹபரணவுக்கு வரச் சொன்னார்.
மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்கள் என்னிடமும் பிள்ளையானிடமும் அரசாங்கம் மாறி விட்டது,
எந்த நேரமும் என்னவும் நடக்கலாம்.
ஆயுதங்களை மறைத்து வையுங்கள்,
தன்னையும் இடம் மாற்றலாம்.
இராணுவ சம்பளம் சிலவேளை தொகையாகக் கொடுக்க விட மாட்டார்கள் .
ஆட்களுக்கு நேரடியாகத்தான் கொடுக்க வேண்டி வரும் என பல விடயங்களை சொன்னார் .

எதற்கும் 15 பொய் பெயர்களை எழுதித்தாருங்கள் .
அந்த பெயர்களை இராணுவ சம்பள பட்டியலில் சேர்த்து விடுகிறேன் என நம்பிக்கை தந்தார்
பொய்ப் பெயர்களை எங்களுக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரி மொகமட்டுக்கு அனுப்பி இருந்தேன்.
எங்களுக்கு இராணுவ சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது

2015 பொதுத்தேர்தலிற்கு பின்னர் பிள்ளையானை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.
5 மாதம் 4ம் மாடியில் வைத்திருந்தார்கள்.
நான் பிள்ளையானை ஒவ்வொரு சனிக் கிழமையும் அனுமதி பெற்றுச் சந்திப்பேன்.
5 மாதங்களுக்குப் பிறகு பிள்ளையானை மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றினார்கள்.

பிள்ளையானுக்கு வழக்காட சட்டத்தரணியை ஏற்பாடு செய்ய பசில் ராஜபக்சவிடம் உதவி பெறும்படி சுரேஸ் சாலே அறிவுறுத்தி இருந்தார்.
இதற்கிடையில் சுரேஸ் சாலே மலேசியா தூதரகத்துக்கு பாதுகாப்பு பிரதானியாக இடம் மாற்றப்பட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா அவர்களை பசில் ராஜபக்சே ஏற்பாடு செய்து தந்தார்.
பிள்ளையான் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது .
வழக்கினை முன்கூட்டியே முடிக்க ஒத்துழைக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார் சுரேஸ் சாலே.
வழக்கு தவணையின் போது நேரம் கேட்டு ஒத்திவையுங்கள் என சொல்லி இருந்தார்.
நாங்கள் சட்டத்தரணியோடு கதைத்து அந்தத் தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்தோம்.

நான் ஒவ்வொரு வாரமும் அனுமதி பெற்று பிள்ளையானைப் போய்ப் பார்த்தேன்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானுக்கு தனியான ஒரு பெரிய அறை கொடுத்திருந்தார்கள்.
பிள்ளையான் சிறைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தினார்.
அந்தத் தொலைபேசி சிறைக்காவலர் ஒருவர் ஊடாக நான்தான் அனுப்பி வைத்தேன்.
அந்தத் தொலைபேசியில் இரவில் என்னோடு கதைப்பார்.

2017 ஆவணி மாதம் சந்திக்கப் போன போது பிள்ளையான் சிறையில் தங்க வைக்கப்பட்டு இருந்த காத்தான்குடி முஸ்லீம் நபர்களை என்னை சந்திக்கும் படி சொன்னார்.
2017 ஆவணி மாதம் 2 வது கிழமை சிறைச்சாலைச் அத்தியட்சர் அக்பரின் அனுமதியுடன் ஒரு சிறைக்காவலர் அவர்களில் ஒருவரை என்னுடன் பேச அழைத்து வந்தார்.
நானும் பிள்ளையானும் அவரும் சந்தித்தோம்

அவர் தன் பேர் சைனி மௌலவி என்று சொன்னார்.( தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் சஹரான் மௌலவியின் சகோதரர்.).

சில சம்பாஷணைகளுக்கு பிறகு அவர் போய்விட்டார்.
சந்திப்புக்கு பின்னர் இவர்கள் கடும் விஷயமான ஆட்கள் என பிள்ளையான் சொன்னார்.
இவர்கள் வழக்கு முடிந்து வெளியில் வருவார்கள்.
கஷ்டத்தில் இருக்கிறார்கள,  அவர்களுக்கு உதவி செய்வோம் .
அவர்கள் பின்பு எங்களுக்கு உதவி செய்வார்கள் என சொன்னார்

குறிப்பாக சைனி மௌலவியின் மனைவியின் தம்பியிடம் ரூபா 50,000 கொடுக்க சொன்னார் .
அடுத்தநாள் சைனி மௌலவியின் மச்சான் தொலைபேசி எடுத்தார்.

நான் எங்கள் காரியாலயம் மட்டக்களப்பு லேக் றோட்டில் இருக்கு, அங்கு வரச் சொன்னேன்.
அங்கு அவர் வந்தார். அவருக்கு ரூபா 50,000 கொடுத்தேன்.

சம நேரத்தில் பிள்ளையான், சுரேஸ் சாலே யோடு 2 முறை தொலைபேசியில் கதைத்தார்
2017 புரட்டாதி முதல் கிழமை சுரேஸ் சாலே பிள்ளையானைச் சந்திப்பதற்கு சில்வா என்கிற ஒருவரை அனுப்பி இருந்தார்.
அந்த நபர் எங்கள் காரியாலயத்துக்கு வந்தார்.
நானும் அவரும் என்னுடைய வாகனத்தில் சிறைச்சாலைக்குப் போனோம்.
சில்வா தமிழ் நன்றாகக் கதைத்தார்.
சிறைச்சாலைக்குள் போவதற்கு என்னுடைய பேரில் பதிந்து கூட்டிக் கொண்டு போனேன்.

20 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தந்தார்கள்.
20 நிமிடம் கதைக்கப் போனவர் 2 மணித்தியாலங்கள் ஆகியும் கதையை நிறுத்தவில்லை.
சிறைக்காவலாளி தனக்குப் பிரச்சனை வரப்போகுதென்று பயப்படத் தொடங்கினார்.
நான் பிள்ளையானும் சில்வாவும் கதைத்து கொண்டிருந்த சிறை அறைக்குள் புகுந்ததன் பின்னரே அவர்கள் கதைப்பதை நிறுத்தினார்கள் .

அதன் பின் அவரைச் சந்திக்கவில்லை.
சில்வா வந்து போன பிறகு மேற்குறிப்பிட்ட முஸ்லீம் ஆட்களைப் பிணை எடுக்க வேண்டும்.
காசு கொஞ்சம் ஒழுங்கு பண்ண பிள்ளையான் சொன்னார் .
ரூபா இரண்டரை லட்சமளவில் வேண்டும்.
சுரேஸ் சாலேயிடம் கேட்க வேண்டும் என்று பிள்ளையான் சொன்னார்.
நான் சுரேஸ் சாலேயிடம் பிணையெடுப்பதற்கு காசு இரண்டரை லட்சம் தரும்படி கேட்டேன்.
சுரேஸ் சாலே தான் மொகமட் அவர்களிடம் சொல்லி ஒழுங்கு பண்ணுகிறன் என்று சொன்னார்.

எங்கள் செப்டம்பர் மாதச் சம்பளத்தோடு சேர்த்து இரண்டரை லட்சம் மேலதிமாகத் தரப் பட்டது.
நான் அந்தக் காசை சைனி மௌலவியின் மச்சானிடம் கொடுத்தேன்.
பின்பு பிணை எடுப்பதற்கு ஓட்டமாவடி சட்டத் தரணி ராசிக் ஐ ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன்.

அவர்கள் 24.10.2017 பிணையில் வெளியில் வந்தார்கள்.
2018 ஜனவரி மாத கடைசியில் மேற்படி பிணையில் வந்தவர்களைச் சுரேஸ் சாலே சந்திக்க விரும்புவதாகப் பிள்ளையான் சொன்னார்.
அந்தக் கலந்துரையாடலுக்கு ஒழுங்குபடுத்திக் கொடுக்க சொன்னார் .
அந்தக் கலந்துரையாடலுக்கு என்னையும் போகச் சொன்னார். . இராணுவ வாகனத்தில் போக அறிவுறுத்தினார்.

நான் சைனி மௌலவிக்குப் முதல்நாளே போன் பண்ணி எனக்கு இப்படி ஒரு கூட்டம் இருக்கு. நீங்கள் உங்கடை ஆட்களைக் கூட்டிக் கொண்டு வர சொல்லி இருந்தேன்.தனக்குப் பிள்ளையான் ஏற்கனவே தொலைபேசியில் சொன்னதாகச் சொன்னார்.
சுரேஸ் சாலே தொலைபேசி எடுத்தார். தானும் வந்து கொண்டிருக்கிறேன் என உறுதிப்படுத்தினார்.புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலைபோல் வளர்ந்திருந்த தோட்டத்தில் கூட்டம் ஒழுங்கு படுத்த பட்டு இருந்தது .

அங்கு எனக்கு சைனி மௌலவி ஒருத்தரை மட்டும்தான் தெரியும்.
சைனி மௌலவி தான் எனக்கு தனது சகோதரரை அறிமுகப் படுத்தினார்.

அவர் தனது பெயர் சஹ்ரான் என்று சொன்னார்.
சுரேஸ் சாலே அவர்களிடம் சஹ்ரான் மௌலவியை நான் தான் அறிமுகப் படுத்தினேன்.

இவரைப் பற்றி ( சுரேஷ் சாலே ) நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சஹ்ரான் சொன்னார்.
உடனேயே அவர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளே நுழைந்தார்கள் .
அங்கு கதிரைகள் போட்டு எல்லாம் இருந்தது. நான் போகவில்லை. என்னைக் கூப்பிடவும் இல்லை.
நான் வெளியில் நின்றிருந்தேன். கூட்டம் 3 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றது.
நான் வெளியிலே காத்துக் கொண்டிருந்தேன்.

கூட்டத்திற்கு பிறகு சுரேஷ் சாலே தனியாக என்னைக் கூப்பிட்டு எனக்குச் சொன்னார்.
பிள்ளையான் சிறையிலிருந்தும் வழக்கிலிருந்தும் வெளியிலை வாறதென்றால் கோத்தபாயா ஜனாதிபதியாக வந்தால் மாத்திரம்தான் முடியும்.
இல்லாவிட்டால் பிள்ளையான் மட்டுமல்ல எல்லோரும் உள்ளே போக வேண்டி வரும் என எச்சரித்தார் .

அடுத்தநாள் பிள்ளையானைச் சந்தித்து நடந்த விபரங்கள் எல்லாவற்றையும் சொன்னேன்.
பிள்ளையான் கோத்தபாயாவை வெல்ல வைக்கிறதுக்கு சுரேஸ் சாலே பெரிய பிளானில் வேலை செய்கிறார்.
நாங்கள் அதுக்கு உதவி செய்ய வேணும். அப்பதான் நான் வெளியிலை வரலாம் என சொன்னார்

11.2.2018 செப்டம்பரில் எங்கள் எல்லோரையும் சந்திக்க கோட்டபாய வரச் சொன்னார்.
நான், பிரசாந்தன், தேவராஜ், இனியபாரதி ஆகியோர் கொகுவலை வீட்டில் கோட்டாபய அவர்களை சந்தித்தோம்.
அங்கு ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண  இருந்தார்.
அந்தக் கூட்டத்தில் கோத்தபாயா நான் ஜனாதிபதி தேர்தலில் வென்றால் பிள்ளையானை விடுவிக்க முடியும் என்றும் தனக்காக முழுமையாக வேலை செய்யுங்கள் என்றும் சொன்னார்

மேற்படி சந்திப்பு நடந்து 2 மாதத்துக்குப் பிறகு, சுரேஸ் சாலையும் சஹரானும் வனாத்துமுல்லையில் சந்தித்து 14 மாதங்களின் பின்; ஜனாதிபதி தேர்தலுக்கு 7 மாதங்களுக்கு முன் உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடந்தது.

இதன் போது நான் மட்டக்களப்பில் இருந்தேன். .

நான் உடனடியாகப் பிள்ளையானைச் சந்திக்கப் 11 மணிக்குப் போனேன்.

பிள்ளையானுக்கு நான் போவதற்கு முன்னர் எல்லாம் தெரிந்திருந்தது.

யாருக்கும் ஒன்றும் தெரியாத நேரத்தில் பிள்ளையான் நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்.

இது எங்களுடைய கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும். சுரேஸ் சாலே கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும்.

இது நமக்கு நல்லது. அரசாங்கம் எப்படியும் மாறும் என சொன்னார்…

ஐப்பசி 15, 2021 தேதி சுரேஸ் சாலே அவர்களை கோத்தபாயா அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் சந்தித்தேன்.

தனது அறைக்குள் வைத்துத் தனது கணனியில் பாராளுமன்றத்தில் ஹரின் பெர்னாண்டோ பேசிய வீடியோவை என்னைப் பர்க்கும்படி சொன்னார்.

அதே போல ஆயர் சிறில் காமினி, அவர்கள் பேசிய வீடியோவை பார்க்க சொன்னார்.

பாராளமன்ற உறுப்பினர் நளின் பண்டார அவர்களின் வீடியோவையும் பார்க்க சொன்னார்.

‘இவர்கள் சஹரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கிறது என சொல்லுவது பற்றி தெரியுமா? என கேட்டார்.

நான் சஹரானைச் சந்தித்தது எனக்கும் உனக்கும் பிள்ளையானுக்கும் தான் தெரியும்.

நீ தான் சொல்லியிருக்க வேண்டும்.

அதுக்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார்.

நான் அதுபற்றி யாரோடும் கதைக்கவில்லை. என்னுடைய கைத்தொலைபேசியை வாங்கினார்.
நான் கடவுச்சொல்லைச் சொன்னேன்.
என்னுடைய கைத்தொலைபேசியைப் பூரணமாகச் சோதனை செய்தார்.

2007 இல் இருந்து அவரை எனக்குத்தெரியும். அவர் மிகக் கடுமையாக இருந்தது இம்முறைதான். 10 மணிக்குப் போனேன். 1 மணிக்குத்தான் வெளியே விட்டார்.

இவர் என்னைக் கடுமையாகச் சந்தேகிக்கிறார் என்று எனக்கு விளங்கி விட்டது.

வெளியே வந்து பிள்ளையானுக்குத் தொலைபேசி எடுத்தேன். சுரேஸ் சாலை என்னைக் கூப்பிட்டுக் கடுமையாக விசாரித்தார். சந்தேகப் படுகிறார். எனக்குப் பயமாகக் இருக்கின்றது என சொன்னேன்

ஒக்டோபர் 16 ஆம் தேதி பிள்ளையான் தனியே சுரேஷ் சாலேவை சந்தித்த விடயம் அமலன் (சாரதி) மூலமாக எனக்கு தெரியவந்தது.

சுரேஷ் சாலே ஐ சந்தித்தது குறித்து பிள்ளையான் என்னிடமும் சொல்லவில்லை .

பிள்ளையானும் சுரேஷ் சாலே போல என்னை சந்தேகிக்க தொடங்கி விட்டார் போல இருந்தது.

இராணுவத்தை நான் காட்டி கொடுத்ததாக அவர்கள் நினைக்க தொடங்கியதாக அஞ்ச தொடங்கினேன் .

Tags: மைதிரிபாலா சிறிசேனாஜனதிபதிமகிந்த ராஜபக்சபிள்ளையான்அசாத் மௌலானாராஜபக்சபசில் ராஜபக்சகோத்தபாய ராஜபக்சசுரேஸ் சாலேசனல் 4தற்கொலை குண்டுதாரி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ஈஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதல் முதல் குற்றவாளி யார்? : உண்மையை உடைத்த சானல் 4 …

அடுத்த செய்தி

கோவிந்த நாமம் எழுதுபவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
22/12/2025
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

மேலும்...

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

மேலும்...

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

மேலும்...

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

மேலும்...

யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது: பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது: பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை
by கண்ணன்
17/12/2025
0

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொம்மைவெளி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன்...

மேலும்...

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.
by Stills
16/12/2025
0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது "டிட்வா" சூறாவளி பற்றி இந்தியா காலநிலை திணைக்களம் இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை. இந்திய...

மேலும்...
அடுத்த செய்தி
கோவிந்த நாமம் எழுதுபவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம்.

கோவிந்த நாமம் எழுதுபவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

29/12/2025
வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

25/12/2025
ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

24/12/2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

23/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.