கொழும்புதுறைமுகத்தின் மேற்குகொள்கலன் அபிவிருத்தி பணிகபளை இந்தியாவின் அதானி குழுமம் ஆரம்பிக்கவேண்டும் என துறைமுகவிவகாரங்களிற்கான அமைச்சர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலைமின்திட்டம் இலங்கைக்கு சாத்தியமில்லை என்பதாலேயே அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்புதுறைமுக மேற்குமுனையம் திட்டத்திற்கான நிதிதேவைகள் எழுந்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் அந்த திட்டத்திற்கு நிதி வழங்குவதற்கு முன்வந்த அமெரிக்க நிறுவனத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையில் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் ஏற்கனவே இந்த விடயத்திற்கு தீர்வை கண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் தனது சொந்த நிதியிலிருந்து அதானி குழுமம் இந்த திட்டத்திற்கான நிதியை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புதுறைமுகத்தில் மிகவிரைவில் அதானி குழுமம் தனது நடவடிக்கைளை ஆரம்பிப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் அது இலங்கைக்கும் துறைமுக அதிகார சபைக்கும் பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.