தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கார்த்திகை மலரை அவமதிக்கும் வகையில், முன்னணி பாதணி நிறுவனம் ஒன்று கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்துள்ளது.
கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள காட்சியறையில் குறித்த பாதணி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதுடன் குறித்த இந்த பாதணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறான அவமதிப்பாக செயலில் ஈடுபட்டு தமிழர்களை இழிவுப்படுத்தும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர். குறிப்பாக தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை மலர்கள் தமிழர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும், குறித்த காலணிகளை மீளப் பெற வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களினூடாக தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.