நேற்று வியாழக்கிழமை (26) இரவு 10.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் “குஷ்” போதைப்பொருளுடன் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரின்பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 130 கிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளின் மொத்த மதிப்பு 2 கோடியே 13 இலட்சம் ரூபா ஆகும். கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.