Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஆன்மீகம்

இராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு.!

Stills by Stills
02/07/2025
in ஆன்மீகம்
0
இராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு.!
0
SHARES
11
VIEWS
ShareTweetShareShareShareShare

19 ஆம் நூற்றாண்டில் இராமகிருஷ்ண பரமஹம்சர்  வாழ்ந்தார்.

இயற்பெயர்    :-  கதாதர சட்டோபாத்யாயா

தந்தை பெயர் :- கதாதர்க்ஷூதிராம்

தாய் பெயர்       :- சந்திரமணிதேவி

மனைவி பெயர் :- சாரதாதேவி

பிறந்த தேதி :- பிப்ரவரி 18, 1836
மகா சமாதி  :-ஆகஸ்ட் 16, 1886. 
புகழ் பெற்றது :-தட்சிணேஸ்வரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாக. 
மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் கதாதர்க்ஷூதிராம் சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக  பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.

கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர்.

ராம்குமாரின் திருமணம் கி.பி.1820 இல் நடந்தது.கி.பி.1849ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே அதன் முகத்தைப் பார்த்தவாறு உயிர் நீத்தாள். அந்தக் குழந்தைக்கு அட்சயன் என்று பெயரிடப்பட்டது. அதன்பின் ராம்குமாரை வறுமையும், துயரமும் வாட்டின. மனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை சகோதரர் ராமேசுவரரிடம்(பிறப்பு கி.பி.1826) ஒப்படைத்துவிட்டு கல்கத்தா சென்றார். அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கலானார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீட்டில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியிலிருந்து மிகவும் குறைந்த வருவாய்தான் அவருக்குக் கிடைத்தது.

ராமேசுவரர், கதாதரனை மிகவும் நேசித்த போதிலும் அவனது படிப்பைப் பற்றி மட்டும் எந்தக் கவலையும் படவில்லை. கதாதரனும் தமது பள்ளி நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடகக்குழு அமைத்து நண்பர்களுக்கு பயிற்சி அளித்தான்.

கல்கத்தாவில் இருந்த ராம்குமாரின் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். வருடத்திற்கொரு முறை குடும்பத்தினருடன் தங்க வரும் ராம்குமார், கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டார். எனவே தாயுடனும் ராமேசுவரருடனும் கலந்து பேசி கதாதரனை கல்கத்தா அழைத்துச் சென்றார். கதாதரன் அவருடன் சென்றால் பாடசாலையை கவனிக்க உதவி செய்யலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பதினேழு வயதில் அவர் கல்கத்தா சென்றார். அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததுடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார் கதாதரர். இவ்வாறுஅங்கு கதாதரர் 1852 முதல் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். அடுத்த இரண்டு வருடங்களில் ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது.

அச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த இராணி ராசமணி கட்டிய தட்சிணேசுவரம் காளி கோயிலில் அவர் அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், வேதபாடசாலையில் இருந்த ராம்குமார் பிரச்சனைக்கு தீர்வு கூறினார். இதன்பின் ராணி ராசமணி கட்டிய கோவிலில் ராணியின் வேண்டுகோளின்படி ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.

ராம்குமாரின் விருப்பப்படி தட்சிணேசுவரத்தில் இருந்து வந்தார் கதாதரர். ராணியின் மருமகனான மதுர்பாபு, கதாதரரைக் கண்டது முதலே ஈர்க்கப்பட்டு அவரிடம் அன்னை காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க எண்ணினார். ஒருமுறை மதுர்பாபு நேரடியாக பூஜைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆபரணங்களின் பொறுப்பை ஹிருதயர் ஏற்றுக்கொள்வதானால் தாம் பூஜைப் பணியை ஏற்றுக்கொள்வதாக கதாதரர் கூறினார். இது நிகழ்ந்த ஆண்டு 1855.ஏதோ வேலை நிமித்தமாக கல்கத்தாவின் வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற ஊருக்கு சென்ற ராம்குமார் அங்கேயே காலமானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் கதாதரர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.

தட்சிணேசுவரம் காளி கோயில் பவதாரிணி காளிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த இராமகிருஷ்ணருக்கு அன்னையை நேரில் காணும் ஏக்கமும் ஆவலும் தீவிரமாகி என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சிக்குப் பிறகு இராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில்(1859) சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

ராணி ராசமணி 1861ஆம் ஆண்டு இறுதியில் காலமானார். அதன் பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்தார். அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோருடைய காட்சி கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தினக்குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்

இராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப்  புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகத்து 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகத்து 16 அன்று மகா சமாதி அடைந்தார்.

தட்சணேஸ்வரம் காளி கோயில்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் தட்சணேஸ்வரம் காளி கோயில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இக் கோயிலின் முதன்மைக் கடவுள் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி.

தலைமைக் கோயில் ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் குறிப்பிடத்தக்க காலப் பகுதியைக் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.

1847 ஆம் ஆண்டில், ஜமீந்தாரிணியான ராணி ராஷ்மோணி (ராணி ராசமணி) என்பவர் இந்துக்களின் புனிதத் தலமான காசிக்கு ஒரு நீண்ட யாத்திரை செல்வதற்கு விரும்பினார். இவரும், இவரது உறவினர்களும், வேலையாட்களும், தேவையான பொருட்களுடன் 24 படகுகளில் செல்வதாக இருந்தது. கிளம்புவதற்கு முதல் நாள் இரவில் ராணியின் கனவில் தோன்றிய காளி, காசிக்குப் போக வேண்டிய தேவை இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் அழகிய கோயிலொன்றைக் கட்டி அங்கே தனது சிலையை வைத்து வணங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் பின்னர் உடனடியாகவே ராணி ஒரு நிலத்தை வாங்கி கோயிலைக் கட்டுவதற்குத் தொடங்கினார். 1847 ஆம் ஆண்டுக்கும் 1855 ஆம் ஆண்டுக்கும் இடையில் இப் பெரிய கோயில் தொகுதியின் கட்டிட வேலைகள் நிறைவேறின. இதன் தலைமைக் குருக்கள் அடுத்த ஆண்டில் காலமாகவே அப்பதவி அவரது தம்பியான இராமகிருஷ்ணருக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்து 30 ஆண்டுகளுக்குப் பின் 1886 ஆம் ஆண்டில் அவர் இறக்கும்வரை அக் கோயிலின் புகழுக்கும், பெருமளவில் பக்தர்கள் வருவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.

இவர்ஆன்மீகவாதி மற்றும் ஞானி ஆவார். “கடவுள் ஒருவரே, பல வழிகளில் அவரை அடையலாம்” என்பதை அவர் வலியுறுத்தினார். 

அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகள் என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

விவேகானந்தரின் குருவாகவும் அறியப்படுகிறார். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும். மனம் ஒருநிலைப்படும்போது கடவுளை அடைய முடியும்.பக்தி, ஞானம், செயல் ஆகியவற்றின் மூலம் கடவுளை அடையலாம். உபநிடதங்களுக்கு நிகராக இவரது உபதேசங்கள் கருதப்படுகின்றன. ஆன்மீகத்திற்கு ஒரு புதிய வெளிச்சம் தந்த
இராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழா,  பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்படுகிறது.
இராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (The Gospel of Sri Ramakrishna).
அன்னை சாரதாதேவி இராமகிருஷ்ண பரமஹம்சர்.
இயற்பெயர்:- சாரதா தேவி

பிறப்பு            :- 22 டிசம்பர்1853,

ஜீவசமாதி   :-  20 ஜூலை1920
 பிறந்த இடம் : -ஜெயராம்பாடி

மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் பிறந்தவர் தந்தை கோயில் பூசாரி. பள்ளிக்குச் சென்று பயின்றதில்லை. இளம் வயதிலேயே தனித்தன்மையுடன் விளங்கினார்.

கழுத்து வரை நிற்கும் தண்ணீரில் இறங்கி, பசுக்களுக்குப் புல் வெட்டி வருவார். வயலில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பார். பருத்தித் தோட்டத்தில் தாயுடன் சேர்ந்து பருத்தி எடுப்பார். ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த அரிசியை எடுத்து சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, பசியாற்றினார்.

வீட்டில் தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பின்னாளில் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

அந்நாள் வழக்கப்படி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இவரை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத் தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்துவிட்டார்களே’ என்று பரிதாபப்பட்டனர். அதனால் அச்சமடைந்தார்.

நேரில் சென்று கணவரைப் பார்த்த பிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார். கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவரை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி, பூஜித்தார் பரமஹம்சர்.

சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், அன்னை சாரதாதேவி’யாக மாறினார். சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.

 இறுதி நாட்களில் ராமகிருஷ்ணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்தார். பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு, சீடர்களை சிறப்பாக வழிநடத்தினார்.

ஒருமுறை கயாவுக்கு சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், ராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாக பிரார்த்தித்தார். இதுதான் ராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம்.

அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர்.

மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள். உங்கள் தவறுகளைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள். யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார். அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார்.

விவேகானந்தர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களுள் ஒருவராவார்.

 

இயற்பெயர் :-நரேந்திரநாத் தத்தா

தந்தை பெயர் :- விஸ்வநாத் தத்தா

தாய் பெயர்       :-புவனேஸ்வரிதேவி

பிறப்பு :-  12ஜனவரி 1863
மகாசமாதி :- 4 ஜூலை1902
பிறந்த இடம்:- கொல்கத்தா
ராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர் சுவாமி விவேகானந்தர்,ஞானோதயம் அடைந்த பிறகு, ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சுற்றி பல சீடர்கள் கூடினர். பேலூர் மடத்திற்கு சென்றபோது, ​​அவர் ஒரு புரட்சியைத் தொடங்கினார், அது இன்னும் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இன்று, அவரது குருவின் செய்திக்கான வாகனமாக, அவர் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாகஉள்ளது.
1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்திற்காக அமெரிக்கா சென்ற முதல் யோகி விவேகானந்தர், அதன் பிறகு ஆன்மீக அலையை ஏற்படுத்தினார். புதிதாக உள்ள எதையும் மக்கள் எதிர்க்கும்போது, அவர் வந்து ஓரளவு வாயில்களைத் திறந்தார்.

ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உலகிற்கு தன் செய்தியை எடுத்துச் செல்வதற்கான ஒரு வழியாகக் கருதியதால், அவர் மீது மிகவும் வித்தியாசமான பற்று இருந்தது. ராமகிருஷ்ணர் தன்னால் அதைச் செய்ய முடியாததால் விவேகானந்தரை ஒரு வாகனமாகப் பார்த்தார்.      ராமகிருஷ்ணருக்கு, விவேகானந்தர்.

விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதமான சம்பவம் உண்டு. ஒருநாள், அவரது தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருந்தார். அப்போது திடீரென்று விவேகானந்தருக்கு தன் கைகளில் பணம் இல்லாததும், தாயாருக்குத் தேவையான மருந்தையோ உணவையோ வழங்க முடியவில்லை என்பதும் மனதில் தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்பது அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. விவேகானந்தரைப் போன்ற ஒரு மனிதன் கோபப்பட்டால், அவன் உண்மையில் கோபத்தின் உச்சத்தில் உள்ளான் என்பதாகும். ராமகிருஷ்ணரிடம் போனான் – கோபம் வந்தாலும் போக வேறு எங்கும் இல்லை, அங்கேதான் போனான்.

அவர் ராமகிருஷ்ணரிடம் “இதெல்லாம் முட்டாள்தனம், இந்த ஆன்மீகம், இது என்னை எங்கே கொண்டு செல்கிறது? நான் வேலையில் இருந்திருந்தால், நான் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்திருந்தால், இன்று என் அம்மாவை நான் கவனித்துக் கொண்டிருக்கலாம். நான் அவளுக்கு உணவு கொடுத்திருக்கலாம், மருந்து கொடுத்திருக்கலாம், அவளுக்கு ஆறுதல் கொடுத்திருக்கலாம். இந்த ஆன்மீகம் என்னை எங்கே கொண்டு சென்றது?”

ராமகிருஷ்ணர் காளியை வழிபடுபவர் என்பதால், அவரது வீட்டில் காளி சந்நிதி இருந்தது. அவர் “உன் அம்மாவுக்கு மருந்தும் உணவும் தேவையா? ஏன் அம்மாவிடம் போய் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கக்கூடாது?” விவேகானந்தருக்கு இது ஒரு நல்ல யோசனையாகத் தோன்றியது, அவர் சந்நிதிக்குள் சென்றார்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். ராமகிருஷ்ணர், “அம்மாவிடம் சாப்பாடு, பணம் மற்றும் உங்கள் அம்மாவுக்குத் தேவையானதைக் கேட்டாயா?” என்றார்.

அதற்கு விவேகானந்தர், “இல்லை, மறந்துவிட்டேன்” என்றார்.

“மீண்டும் உள்ளே சென்று கேள்” என்றார் ராமகிருஷ்ணர்.

வேகானந்தர் மீண்டும் சந்நிதிக்குள் சென்று நான்கு மணி நேரம் கழித்து திரும்பி வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம், “அம்மாவிடம் கேட்டாயா?”

அதற்கு விவேகானந்தர், “இல்லை, மறந்துவிட்டேன்” என்றார்.

ராமகிருஷ்ணர் மீண்டும் கூறினார். “மறுபடியும் உள்ளே போ இந்த முறை, மறக்காமல் கேள்.”

விவேகானந்தர் உள்ளே சென்று எட்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். ராமகிருஷ்ணர் மீண்டும் அவரிடம், “அம்மாவிடம் கேட்டாயா?”

விவேகானந்தர், “இல்லை, நான் கேட்கமாட்டேன். நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.”

அதற்கு ராமகிருஷ்ணர், “நல்லது. நீ இன்று சந்நிதியில் ஏதாவது கேட்டிருந்தால், இதுவே உனக்கும் எனக்கும் இடையிலான கடைசி நாளாக இருந்திருக்கும். நான் உன் முகத்தை மீண்டும் பார்த்திருக்க மாட்டேன், ஏனென்றால் கேட்கும் முட்டாளுக்கு வாழ்க்கை என்னவென்று தெரியாது. கேட்கும் முட்டாளுக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் புரிவதில்லை.”

பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட குணம். நீங்கள் பக்தி செய்தால், நீங்கள் வணங்கும் நிலைக்கு உயர்ந்தால், அது ஒரு அற்புதமான வழி. ஆனால் உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் பிரார்த்தனை செய்தால், அது உங்களுக்கு வேலை செய்யப் போவதில்லை.

அவருக்கு 19 வயதாக இருந்தபோது, விவேகானந்தர் மிகவும் தர்க்கரீதியான, அறிவார்ந்த சிறுவனாக, அனைத்திலும் தீயாய் இருந்தார். எல்லாவற்றிற்கும் சரியான பதில்களை அவர் விரும்பினார். அவர் ராமகிருஷ்ணரிடம் வந்து கேட்டார், “நீங்கள் எப்போதும் கடவுள், கடவுள் என்று பேசுகிறீர்கள். ஆதாரம் எங்கே? ஆதாரத்தைக் காட்டுங்கள்!” ராமகிருஷ்ணர் மிகவும் எளிமையானவர். அவர் படித்தவர் அல்ல. அவர் ஒரு ஆன்மீகவாதி, அறிஞர் அல்ல. அதனால், “நான்தான் ஆதாரம்” என்றார்.

“கடவுள் இருக்கிறார் என்பதற்கு நானே ஆதாரம்” என்றார் ராமகிருஷ்ணர்.

விவேகானந்தருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஏனென்றால் இது முற்றிலும் அபத்தம். அவர் ஒரு சிறந்த அறிவார்ந்த விளக்கத்தை எதிர்பார்த்தார் – “கடவுளின் ஆதாரம் விதை முளைப்பது மற்றும் கிரகம் சுழல்வது.” ஆனால் ராமகிருஷ்ணர், “கடவுள் இருக்கிறார் என்பதற்கு நானே ஆதாரம்” என்றார். “நான் இருக்கும் விதம்தான் ஆதாரம்” என்று ராமகிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தார். விவேகானந்தருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து, “சரி, நீங்கள் எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?” என்றார். “பார்க்கும் தைரியம் உனக்கு இருக்கிறதா?” என்று ராமகிருஷ்ணர் கேட்டார். துணிச்சலான சிறுவன், “ஆம்” என்று சொன்னான், ஏனெனில் இது அவனை வேதனைப்படுத்தியது. எனவே ராமகிருஷ்ணர் விவேகானந்தரின் மார்பில் தனது கால்களை வைத்தார், விவேகானந்தர் ஒரு குறிப்பிட்ட சமாதிநிலைக்கு சென்றார், அங்கு அவர் மனதின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தார். ஏறக்குறைய 12 மணிநேரம் அவர் அதிலிருந்து வெளியே வரவில்லை. அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் வேறொரு கேள்வியைக் கேட்டதில்லை.

நீங்கள் ஒரு பக்தராக இல்லாதவரை, வாழ்க்கை உங்களுக்காக திறக்கக்கூடாது, ஏனென்றால் அது உங்களுக்காக திறந்தால், உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் சேதம் மட்டுமே ஏற்படும். இந்தியாவில், பக்தி இல்லாத ஒருவரிடம் ஞானம் ஒருபோதும் ஒப்படைக்கப்படவில்லை.

விவேகானந்தரின் வாழ்க்கையில் ஒரு அழகான சம்பவம் உண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்த பிறகு, விவேகானந்தர் இளைஞர்களைக் கூட்டி, இந்தியா முழுவதும் பயணம் செய்து, தேசத்தைக் கட்டமைக்கவும், நாட்டின் முகத்தை மாற்றவும் முயன்றார். அப்போது அவரிடம் ஒருவர், அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் மதங்களின் பாராளுமன்றம் நடப்பதாக கூறினார். இங்கு யாரும் அவரைக் கேட்காததால் அங்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர். யாருமே இல்லை! ஒரு இளைஞன் இடம் விட்டு இடம் ஓடி, வேதத்தில் எழுதப்படாத பெரிய விஷயங்களைப் பற்றி பேச முயல்கிறான் – யார் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்? அவர்கள், “நீ போய் அவர்களை அங்கே அசை. நீங்கள் அவர்களை அங்கே அசைத்தால், இங்குள்ள அனைவரும் உங்களைக் கவனிப்பார்கள்.

அவர் மேற்கத்திய நாடுகளுக்கு செல்லவிருந்தபோது – ராமகிருஷ்ணரின் செய்தியை எடுத்துச் செல்ல முதன்முறையாக அமெரிக்காவிற்கு செல்கிறார் – அப்போது அவர் ராமகிருஷ்ணரின் மனைவி சாரதாவிடம் ஆசி பெறச் சென்றார்.

அவர் வரும்போது அம்மையார் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். சாரதா ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இந்தியப் பெண்கள், குறிப்பாக அவர்கள் சமைக்கும்போது, பாடுவது மிகவும் பொதுவானது.   ஒருவர் நன்றாக சாப்பிடுவதைப் பக்கத்தில் இருந்து பார்ப்பது அவர்களுக்கு மிகப் பெரிய திருப்தியாக இருந்தது. சமையல் மிகவும் மகிழ்ச்சியான, விரிவான செயல்முறையாக இருந்தது. 20-30 நிமிட உணவுக்காக, அவர்கள் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மணிநேரம் செலவழிப்பார்கள், அவர்கள் எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார்கள். குறைந்தபட்சம் என் அம்மா எல்லா நேரத்திலும் பாடிக்கொண்டிருந்தார்.

“எனது குருவின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நான் அமெரிக்கா செல்ல விரும்புகிறேன்” என்று சொன்னபோது அவள் பதிலளிக்கவில்லை. உடனே அவள், “நரேன், அந்தக் கத்தியை என்னிடம் கொடு” என்றாள். விவேகானந்தர் அவரிடம் கத்தியை கொடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வழியில் கொடுத்தார்.

அப்போது சாரதா, “நீ போகலாம், உனக்கு என்னுடைய எல்லா ஆசீர்வாதங்களும் உண்டு” என்றாள். அப்போது அவர், “ஏன் இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள், முதலில் கத்தியை ஏன் கேட்டீர்கள்? நீங்கள் தான் காய்கறிகளை வெட்டி முடித்துவிட்டீர்களே” என்று கேட்டார். அவள் சொன்னாள், “சுவாமி போன பிறகு நீ என்னவாக இருக்கிறாய் என்று பார்க்க விரும்பினேன். இப்போது, நீ எனக்கு கத்தியைக் கொடுத்த விதம், நீ செல்லத் தகுதியானவன், சுவாமியின் செய்தியை எடுத்துச் செல்ல நீ தகுதியானவன் என்பதைக் காட்டுகிறது.

பெரும்பாலான குருமார்கள் தாங்களாகவே பிரபலமடைய முடியாது என்பதை நீங்கள் எப்போதும் காணலாம். செய்தியை எடுத்துச் செல்ல அவர்களுக்கு ஒரு நல்ல சீடர் தேவை, ஏனெனில் குருவே உலகின் பல வழிகளிலும் மிகவும் வல்லவராக இருக்க முடியாது. இன்று அனைவரும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி பேசுகிறார்கள். ராமகிருஷ்ணர் மிகவும் கூர்மையான உணர்வுடன் இருந்தார். ஒரு அதிசய மனிதர். ஆனால் அதே நேரத்தில், உலக அளவில், அவர் முற்றிலும் படிக்காதவர். விவேகானந்தர் வராமல் இருந்திருந்தால், அவர் தொலைந்துபோன, மறந்த மலராக இருந்திருப்பார். எத்தனையோ பூக்கள் பூக்கின்றன, ஆனால் அவற்றில் எத்தனை அங்கீகரிக்கப்படுகின்றன?

 

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார், “எந்தவொரு பிரார்த்தனையையும் விட கால்பந்தை உதைப்பது உங்களை தெய்வீகத்திற்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும்”. இது உண்மைதான், ஏனென்றால் நீங்கள் முழுமையாக ஈடுபடாதவரை நீங்கள் கால்பந்து விளையாட முடியாது. இதில் தனிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை, ஈடுபாடு மட்டுமே. உங்களால் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது என்பது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளீர்கள். இப்போது இது ஈடுபாடு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே, எந்த நோக்கமும் இல்லை.

முழு ஈடுபாட்டுடன் நீங்கள் எதையாவது செய்தால், அங்கே செயல் மட்டுமே இருக்கும் என்பதை நீங்கள் பார்க்கலாம் – மனம் வேறு எங்கோ உள்ளது. எனவே ஒரு கால்பந்து விளையாட்டில், வீரர்கள் அந்த வகையான நிலையை அடிக்கடி அடைகிறார்கள், ஏனெனில் அது ஒரே ஒரு விஷயத்தில் உள்ளது. தீவிரமாக ஒரு விஷயம் விளையாடப்படும் போது, பாதி உலகையே ஆட்கொண்டதற்கு அதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட வகையான ஆழ்நிலை உள்ளது – அது உண்மையில் ஆன்மீகம் கடந்து செல்லுதல் அல்ல, ஆனால் ஒருவருடைய வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குறிப்பிட்ட போக்கு மற்ற அனைவருக்கும் தீயாய் பரவுகிறது.

 

ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட சமூக சீர்திருத்தவாதி விவேகானந்தரிடம் சென்று, “நீங்களும் பெண்களை ஆதரிப்பது பெரிய விஷயம், நான் என்ன செய்வது? நான் அவர்களைச் சீர்திருத்த விரும்புகிறேன்” என்று கேட்டார். இதை ஆதரிக்க விரும்புகிறேன். அப்போது விவேகானந்தர், “விட்டுவிடுங்கள், அவர்களைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை; அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்வார்கள்” என்றார். இதுதான் தேவை. ஒரு ஆண், பெண்ணைச் சீர்திருத்த வேண்டும் என்பதல்ல. இடம் கொடுத்தால், அவளே தேவையானதைச் செய்வாள்.

பன்னிரெண்டு அல்லது பதினைந்து வயது இருக்கும்போது, சுவாமி விவேகானந்தர், “உண்மையான அர்ப்பணிப்புள்ள நூறு பேரை எனக்குக் கொடுங்கள், நான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றுவேன்” என்று சில இலக்கியங்களில் சொன்னதைப் பார்க்க நேர்ந்தது. அந்த நேரத்தில் இந்த நாட்டில் இருபத்திமூன்று கோடி மக்கள் இருந்ததாகத் தெரிகிறது, ஆனால் உண்மையிலேயே அர்ப்பணிப்புள்ள நூறு பேரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. “என்ன ஒரு சோகம்! விவேகானந்தர் போன்ற ஒரு மனிதர் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அவர் போன்ற மனிதர் தினமும் தோன்றுவதில்லை. அவர் வரும்போது, இந்தப் பரந்த நாட்டில் நூறு பேரைக்கூட கொடுக்க முடியவில்லை”. இந்தக் கலாச்சாரத்திற்கும் இந்த நாட்டிற்கும் இது ஒரு பெரிய சோகமே.

ஒருவருக்கு அபாரமான தொலைநோக்குப் பார்வை இருந்தது, மேலும் அதனால் பல விஷயங்கள் நடந்துள்ளன. இன்றும் அவர் பெயரில், மனித நல்வாழ்வுக்காக நிறைய நடக்கிறது. அவருடைய தொலைநோக்குப் பார்வையால் நிறைய நடந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அவருடன் வாழ்ந்த மற்றவர்கள், எங்கே? ஆனால் அவரது தொலைநோக்குப் பார்வை இன்னும் ஏதோ ஒரு வகையில் செயல்படுகிறது. அதனால் நிறைய நல்வாழ்வு கிடைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் இதே தொலைநோக்குப் பார்வை கொண்டு சென்றிருந்தால், இன்னும் சிறப்பாக நடந்திருக்கும். ஒரு கௌதம புத்தருக்கோ அல்லது ஒரு விவேகானந்தருக்கோ மட்டும் தொலைநோக்குப் பார்வை இருந்தால் போதாது. மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரிவினருக்கு இப்படியொரு தீர்க்கமான பார்வை இருந்தால் மட்டுமே, சமூகத்தில் உண்மையில் அழகான விஷயங்கள் நடக்கும்.

.

Tags: இராமகிருஷ்ணபரமஹம்சர்வரலாறு
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!
by Stills
13/06/2025
0

அதிகாலை, 3.00 (3.20_3.40 ரிஷிமுகூர்த்தம் ) முதல், 6:00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்யும் போது  அதிக பலன்கிடைக்கும். தியானம் என்பது ஆன்மாவை எல்லையற்ற பரம்பொருளுடன்...

மேலும்...

தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை
by Stills
12/06/2025
0

நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது? நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம்...

மேலும்...

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்
by Stills
12/02/2025
0

நீங்களும் பயன் பெறுங்கள்: உங்கள் துன்பத்தில்இருந்துவிடுபட இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்வதால் துன்பம் விலகும் என்றும் திருப்பெருந்துறையில்  மாணிக்கவாசகர் அருளியது அடைக்கலம் என்பது, அடைக்கலமாக ஒப்புவித்துத் தமக்கெனச்...

மேலும்...

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!
by Stills
12/02/2025
0

குபேரன் திசை வடக்கு. செல்வத்தின் அதிபதி,  நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன்  குடியிருக்கும் இடம் சிரசு. குபேர...

மேலும்...

2023 இன்று பெயர்ச்சியாகும் சனி  ஏழரை யாருக்கு என்ன நடக்க உள்ளது.!

2023 இன்று பெயர்ச்சியாகும்  சனி  ஏழரை யாருக்கு என்ன  நடக்க உள்ளது.!
by Stills
20/12/2023
0

சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஏழரை சனி, 12 ராசிகளுக்கு என்ன சனி நடக்கப் போகிறது கும்பத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகக்கூடிய நிலையில் மகரம், கும்பம்,...

மேலும்...

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!
by Stills
20/11/2023
0

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம். பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. கொஞ்சம்...

மேலும்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு.!

இராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு.!

02/07/2025
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.