ஜாதி, மதம், பணம், பொறாமை இல்லா அமைதியான இடத்திற்கு சென்றிருக்கிறாள்!
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மரணமடைந்த நிலையில், தந்தையாக உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. மகளின் மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் ஆண்டனி, மகளை பிரிந்த தந்தையாக உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், “ அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்றிருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.
அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.