தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் உடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (08) மரியாதை நிமிர்த்தம் சந்தித்திருந்தார்.
இதன் போது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.