கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்களில், 125 போக்குவரத்து மீறல்கள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, இவ்வாறு விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாள ர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. CCTV கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடித் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்களால் 125 போக்குவரத்து விதி மீறல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆரம்பகட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட தவறுகளாக பாதையை மாற்றியமை மற்றும் நிறுத்தல் கோடுகளில் நிற்காமல் சென்றமை போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



















