வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் பணம் அந்நிய செலவாணியாக கிடைத்துள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2215 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
அதே வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் பணம் அனுப்பியதில் 74.4% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.