ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிற்கு எதிராக ஜோபைடன் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு காசாமீதான கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவை நம்பியிருக்கலாம் ஆனால் தற்போது அது அமெரிக்காவையும் தாண்டியவிடயம் ஐரோப்பிய ஒன்றியமும் முழுஉலகமும் இஸ்ரேலிற்கு ஆதரவளிக்கின்றது என தெரிவித்துள்ளபைடன் எனினும் கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் உலகின் ஆதரவை இழக்கதொடங்கி யுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் ஹமாசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து எந்த கேள்வியும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அதற்கான முழு உரிமையும் இஸ்ரேலிற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கனடா அமெரிக்காவுடன் இணையுமா?
கனடா அமெரிக்காவுடன் இணைப்பது உண்மையா? பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கு ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தீவிர ஆர்வம்...
மேலும்...