லண்டன் 2026 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது அத்தியாயம் முழு அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 24 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாளில் ஜூன் 12 அன்று எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும். 12 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணி வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறும். எட்டு நாடுகள் ஏற்கனவே தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளன, மீதமுள்ள நான்கு பங்கேற்பாளர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் தீர்மானிக்கப்படுவார்கள்.
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 அத்தியாயங்களில் (2009, 2010, 2012) 8 அணிகளும் அடுத்த 6 அத்தியாயங்களில் (2014, 2016, 2018, 2020, 2023, 2024) 10 அணிகளும் பங்குபற்றின.
பத்தாவது அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து ஆகியவற்றுடன் குழு 2இல் இலங்கை இடம்பெறுகிறது. அத்துடன் பிராந்தியங்களில் நடைபெறும் மகளிர் ரி10 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து இரண்டு அணிகள் இக் குழுவில் இணையும்.
குழு 1இல் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், 2 தகுதிகாண் அணிகள் ஆகியன இடம்பெறும்.
10 அணிகள் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 30 லீக் போட்டிகளும் 3 இறுதிச் சுற்று போட்டிகளும் நடத்தப்படும்.
லீக் போட்டிகள் யாவும் ஜூன் 29ஆம் திகதியுடன் நிறைவடையும்.
அரை இறுதிப் போட்டிகள் தி ஓவல் விளையாடரங்கிலும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.
முதலாவது அரை இறுதிப் போட்டி ஜூன் 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 2ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதியும் நடைபெறும்.
லீக் போட்டிகள் எஜ்பெஸ்டன், ஹெடிங்லே, ஓல்ட் ட்ரஃபோர்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு, பிறிஸ்டல் கவுன்ட் மைதானம், ஹெம்ப்ஷயர் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறும்.
இலங்கையின் போட்டிகள் (குழு 2)
ஜூன் 12 எதிர் இங்கிலாந்து (எஜ்பெஸ்டன்)
ஜூன் 16 எதிர் நியூஸிலாந்து (ஹெம்ப்ஷயர் பௌல்)
ஜூன் 20 எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (பிறிஸ்டல் கவுன்டி)
ஜுன் 23 எதிர் தகுதிகாண் அணி (பிறிஸ்டல் கவுன்டி)
ஜூன் 25 எதிர் தகுதிகாண் அணி (ஓல்ட் ட்ரஃபோர்ட்) விளையாடும்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை
வெள்ளிக்கிழமை, ஜூன் 12: இங்கிலாந்து vs இலங்கை, எட்ஜ்பாஸ்டன்
சனிக்கிழமை,ஜூன்13:- Qualifier 1 vs Qualifier 2 ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம் சனிக்கிழமை,ஜூன்13:- ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, ஓல்டு டிராஃபோர்டு மைதானம்.
சனிக்கிழமை,ஜூன்13:- வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, ஹாம்ப்ஷயர் பவுல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14:- Qualifier 1 vs Qualifier 2 எட்ஜ்பாஸ்டன்
ஞாயிற்றுக்கிழமை,ஜூன் 14:- இந்தியா vs பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 16: நியூசிலாந்து எதிர் இலங்கை, ஹாம்ப்ஷயர் பவுல் செவ்வாய்க்கிழமை, ஜூன் 16: இங்கிலாந்து vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
புதன்கிழமை, ஜூன் 17: ஆஸ்திரேலியா vs Qualifier ஹெடிங்லி
புதன்கிழமை, ஜூன் 17: இந்தியா vs Qualifier ஹெடிங்லி
புதன்கிழமை, ஜூன் 17: தென்னாப்பிரிக்கா vs பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்
வியாழக்கிழமை, ஜூன் 18: வெஸ்ட் இண்டீஸ் vs Qualifier ஹெடிங்லி
வெள்ளிக்கிழமை, ஜூன் 19: நியூசிலாந்து vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
சனிக்கிழமை, ஜூன் 20: ஆஸ்திரேலியா vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
சனிக்கிழமை, ஜூன் 20: பாகிஸ்தான் vs Qualifier ஹாம்ப்ஷயர் பவுல்
சனிக்கிழமை, ஜூன் 20: இங்கிலாந்து vs Qualifier ஹெடிங்லி
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21: வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை, பிரிஸ்டல் கவுண்டி ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21: தென்னாப்பிரிக்கா vs இந்தியா, ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் செவ்வாய்க்கிழமை, ஜூன் 23: நியூசிலாந்து vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம் செவ்வாய்க்கிழமை, ஜூன் 23: இலங்கை vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம் செவ்வாய்க்கிழமை, ஜூன் 23: ஆஸ்திரேலியா vsபாகிஸ்தான்,
புதன்கிழமை, ஜூன் 24: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் வியாழக்கிழமை, ஜூன் 25: இந்தியா vs Qualifier ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம் வியாழக்கிழமை, ஜூன் 25: தென்னாப்பிரிக்கா vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம் வெள்ளிக்கிழமை, ஜூன் 26: இலங்கை vs Qualifier ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம் சனிக்கிழமை, ஜூன் 27: பாகிஸ்தான் vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
சனிக்கிழமை, ஜூன் 27: வெஸ்ட் இண்டீஸ் vs Qualifier பிரிஸ்டல் கவுண்டி மைதானம் சனிக்கிழமை, ஜூன் 27: இங்கிலாந்து vs நியூசிலாந்து, ஓவல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28: தென்னாப்பிரிக்கா vs Qualifier லார்ட்ஸ்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28: ஆஸ்திரேலியா vs இந்தியா, லார்ட்ஸ்
செவ்வாய்க்கிழமை, ஜூன் 30: TBC எதிர் TBC (அரையிறுதி 1), ஓவல்
வியாழக்கிழமை, ஜூலை 2: TBC எதிர் TBC (அரையிறுதி 2), ஓவல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5: TBC எதிர் TBC (இறுதிப் போட்டி), லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்