டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
இதனால், போராட்டக்காரர்களை கலைக்க கைது நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்ட போதிலும், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை சீர்செய்ய பாதுகாப்பு படையினர் முயன்றனர்.
மாணவர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தில் தேசத்துரோகிகள் ஊடுருவி இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கத்தி, வாள் மற்றும் கட்டை போன்ற பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பு படையினரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது போராட்டக்காரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டில்லியின் கன்னாட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், வாள்கள் மற்றும் கட்டைகளால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 45 வயதான ஈஸ்வர் சிங் என்ற விரைவு அதிரடிப் படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இவர் தப்பியோட முயன்ற போதும், போராட்டக்காரர்கள் துரத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, டோல்ஸ்டாய் மார்க் பகுதியில் போராட்டக்காரர்கள் சிலர், கட்டை, கத்தி மற்றும் வாள் போன்ற ஆயுதங்களை கைகளில் வைத்திருந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்த முயன்ற போது, கல், பாட்டில்கள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களை வீசி தாக்கியுள்ளனர். இதில், 2 உதவி காவல் ஆணையர்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களை அடையாளம் காண போலீசார் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...
Read more




















