Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

கண்ணன் by கண்ணன்
23/07/2026
in இந்தியா
0
நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
0
SHARES
9
VIEWS
ShareTweetShareShareShareShare

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்படும் என உறுதி அளித்ததுடன்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பார்லியை முற்றுகையிட முயன்றதால், வன்முறை ஏற்பட்டு, தலைநகர் டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளும் பார்லியின் செயல்பாடுகளை முடக்கி வருகின்றனர்.
இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி பார்லி வளாகத்தை சுற்றிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வினாத்தாள் கசிவு குறித்தும், நீட் தேர்வு முறையின் குறைபாடுகள் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், வெறும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல. தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே அவை வெளிப்படுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் இரண்டாவது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரியும் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், 80-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் சென்றனர். அங்கிருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டீலர் ஜஸ்டின், மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜதுரை மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி ரவி ஆகியோரை, அவர்கள் பயிலும் வகுப்பறைக்கே சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags: நீட் தேர்வுபிரதமர் மோடிவினாத்தாள் கசிவு
ShareTweetShareShareSendSend
Previous Post

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

Next Post

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

கண்ணன்

கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
by Stills
21/01/2026
0

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று திடீ முடிவுரென தனது நிலைப்பாட்டை மாற்றி 'அதிமு வுடன் இனி சேரப்போவதில்லை' என்று  அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த...

Read more

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!
by கண்ணன்
19/12/2025
0

ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இணைந்த நாஞ்சில் சம்பத் மேடையிலோ, விஜய்யின் பேச்சிலோ இடம்பெறாதது...

Read more
Next Post
டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

23/07/2026
நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

23/07/2026
மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

09/07/2026
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us