அதிகூடிய மொத்த எண்ணிக்கை
50 ஓவர்களில் 417 – 6 விக். அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் – பேர்த் 2015.
மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை
18.4 ஓவர்களில் 36 கனடா எதிர் இலங்கை – பார்ள் 2003
உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது சதம்
137 டெனிஸ் ஏமிஸ் – இங்கிலாந்து எதிர் இந்தியா – லோர்ட்ஸ் (ஜுன் 7. 1975).
வீரரினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்டங்கள்
2278 ஓட்டங்கள் – 45 போட்டிகள் – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா 1992 – 2011).
தனிநபருக்கான அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கை
237 ஆ.இ. மார்ட்டின் கப்டில் – நியூஸிலாந்து எதிர் மே. தீவுகள் – வெலிங்டன் 2015.
ஒரு தொடரில் தனிநபர் பெற்ற அதிக ஓட்டங்கள்
673 ஓட்டங்கள் – 11 இன்னிங்ஸ்கள் – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா – 2003).
வீரரினால் வீழ்த்தப்பட்ட அதிகூடிய மொத்த விக்கெட்கள்
71 விக்கெட்கள் – 39 போட்டிகள் – க்ளென் மெக்ரா (அவுஸ்திரேலியா 1996 – 2007).
அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி
7 – 4 – 15 – 7 விக். – க்ளென் மெக்ரா (அவுஸ்திரேலியா எதிர் நமிபியா – பொச்செஸ்ட்ரோம் 2003).
விக்கெட் காப்பு (அதிக ஆட்டம் இழப்புகளில் பங்களிப்பு)
54 – 36 இன்னிங்ஸ்கள் (41 பிடிகள், 13 ஸ்டம்ப்கள்) குமார் சங்கக்கார (இலங்கை 2003 – 2015).
மிகப் பெரிய இணைப்பாட்டம்
372 ஓட்டங்கள் – 2ஆவது விக்கெட் – மார்லன் சமுவெல்ஸ் – கிறிஸ் கெய்ல் (மே.தீவுகள் எதிர் ஸிம்பாப்வே – கென்பெரா 2015).
ஆரம்ப விக்கெட்டுக்கான மிகப் பெரிய இணைப்பாட்டம்
282 ஓட்டங்கள் – உப்புல் தரங்க – திலக்கரட்ன டில்ஷான் (இலங்கை எதிர் ஸிம்பாப்வே – பல்லேகலை 2011).
மிக மெதுவான தனிநபர் எண்ணிக்கை
சுனில் காவஸ்கர் (இந்தியா) 36 ஆ.இ. 174 பந்துகள் (60 ஓவர்களும் காவஸ்கர் களத்தில் இருந்தார்).