Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் பலிக்குமா? தமிழர்கள் நிலை என்னவாகும்?

Stills by Stills
14/08/2023
in இலங்கை
0
ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் பலிக்குமா? தமிழர்கள் நிலை என்னவாகும்?
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

ரணில் விக்கிரமசிங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் வைத்துக்கொண்டு அந்த நாடகத்தை தொடர்ந்து கொண்டு போக முடியாது. ஏனைய கட்சிகள் குழப்பும் பொழுது நாடகம் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் முடிவில் என்ன மிஞ்சும் ? தமிழ் மக்கள் மத்தியில் பலமான கூட்டுக்களும் இல்லை; பலமான மாற்று அணியும் இல்லை; இனப்பிரச்சினைக்குத் தீர்வும் இல்லை; தீர்வுக்காகப் போராட கட்சிகளும் இல்லை; மக்கள் அமைப்புகளும் இல்லை என்ற ஒரு பரிதாபகரமான நிலைமைதான் தொடர்ந்தும் இருக்கப் போகிறதா? இப்பொழுது கூட்டமைப்பும் இல்லை; பலமான மாற்று அணியும் இல்லை. அது ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகம் வாய்ப்பாக இருக்கிறது. அவர் விக்னேஸ்வரனை தனித்துப் பிரித்து எடுத்து தன்னுடைய புதிய நாடகத்துக்கு அவரை எப்படிப் பங்காளியாக மாற்றலாம் என்று சிந்திக்கின்றார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனும் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைகளின் சிற்பி என்று கருதப்படுகின்ற கலாநிதி விக்னேஸ்வரனும் இணைந்து தயாரித்த மாகாண சபைகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனைக் கட்டமைப்பு என்ற ஒரு பரிந்துரையை ரணில் விக்கிரமசிங்க தந்திரமாகப் பற்றிப்பிடித்து விட்டார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளின் யோசனைகளை கேட்டிருக்கிறார். தமிழ்க்கட்சிகள் தமது யோசனைகளை வழங்கி வருகின்றன.

13ஆவது திருத்தம் எனப்படுவது யாப்பில் இருப்பது, கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக அது யாப்பில் இருந்து வருகிறது, ஆனால் நடைமுறையில் முழுமையாக இல்லை. அதாவது கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த இலங்கை அரசாங்கங்கள் யாப்பை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று பொருள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், கடந்த 36 ஆண்டுகளாக யாப்பு மீறப்பட்டு வந்துள்ளது.

இப்பொழுதும் அதை முழுமையாக அமல்படுத்த ஜனாதிபதி தயாரில்லை. போலீஸ் அதிகாரங்களைக் கழித்து விட்டுத்தான் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்தலாம் என்று கூறுகிறார். அது மட்டுமல்ல அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. அவருடைய மாமனாரின் வார்த்தைகளில் சொன்னால் ஆணைப்பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் முடியாது தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு. ஆனால் அவர் அந்த அதிகாரங்களை பிரயோகித்து யாப்பை முழுமையாக அமுல்படுத்த தயாரில்லை. மாறாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடுதான் அதைச்செய்யலாம் என்று கூறுகிறார். ஆனால் நாட்டின் யாப்பின்படி அவருக்கு நிறைவேற்று அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை அவர் பிரயோகிக்கத் துணியவில்லை. மாறாக பொறுப்பை நாடாளுமன்றத்தின் மீது போடுகிறார்.

அதேசமயம்,கடந்த ஏழாம் திகதி ஜி.எல்.பீரீஸ் கூறியிருக்கிறார், 13ஆவது திருத்தத்தை மீண்டும் ஒரு தடவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரத் தேவை இல்லை என்று. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட ஒரு திருத்தம் அது. அதை முழுமையாக நிறைவேற்ற மீண்டும் ஒரு தடவை நாடாளுமன்றத்தை நாடுவது என்பது ஜனாதிபதியின் உள்நோக்கங்களை காட்டுகின்றது என்ற தொனிப்பட பீரிஸ் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது என்ன செய்ய வேண்டும்? 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்பது யாப்பை முழுமையாக அமுல்படுத்துவதுதான். யாப்பை முழுமையாக அமுல்படுத்தினால் இனப்பிரச்சினை தீர்ந்து விடும் அல்லது அது தீர்வின் தொடக்கமாக காணப்படும் என்றெல்லாம் நம்புவது இனப்பிரச்சினைக்கான தீர்வை யாப்புக்குள் தேடுவதுதான். ஆனால் யாப்புக்குள் தீர்க்கமுடியாத படியால்தான் 2015ஆம் ஆண்டு நிலைமாறு கால நீதி என்ற அனைத்துலக ஏற்பாட்டை ஐநா.மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்தது. 2015 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30இன் கீழ் ஒன்று ஐநா தீர்மானம் அவ்வாறு நிலை மாறுகால நீதியை-பொறுப்புக்கூறலை பரிந்துரைத்தது. நிலைமாறு கால நீதியின் கீழ் செய்யப்பட வேண்டிய கட்டமைப்புசார் மாற்றங்கள் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். அதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டது. ஒரு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் யாப்புருவாக்கத்திற்காக உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன. 83 தடவைகள் சந்தித்து அந்த யாப்புருவாக்க குழுக்கள் இறுதியில் ஓர் இடைக்கால வரைபைத் தயாரித்தன. அதுதான் சர்ச்சைக்குரிய “எக்கிய ராஜ்ஜிய” என்று அழைக்கப்பட்ட இடைக்கால வரைபு ஆகும். அந்த வரைவு நாடாளுமன்றத்தில் முதற் கட்டம் விவாதிக்கப்பட்டு,இரண்டாம் கட்டம் விவாதிக்கப்படுவதற்கிடையில் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.

இவ்வாறு ஒரு புதிய யாப்பை நோக்கி 2015 இல் தொடங்கி 2018 வரையிலும் உழைத்த ரணில் விக்கிரமசிங்க, இப்பொழுது பழைய யாப்பின் ஒரு திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தப் போவதாக கூறுகிறார். அவரோடு இணைந்து 2015இலிருந்து 2018வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக உபகுழுக்களில் அங்கம் வகித்த தமிழ்க் கட்சிகள் அதை அவருக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

யாப்புருவாக்கம் எனப்படுவது இனப்பிரச்சினைக்கான தீர்வில் இறுதிக்கட்டம் தான். அது இன நல்லிணக்கத்திற்கான பரந்தகன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் பிரிக்கப்படவில்லாத ஒருபகுதி.மாறாக யாப்புத் திருத்தமே இனப்பிரச்சினைக்கான தீர்வாகி விட முடியாது.அதிலும் குறிப்பாக ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு திருத்தத்தில் இதுவரை காலமும் அமுல்படுத்தப்படாத அம்சங்களை அமுல்படுத்துவது என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமைய முடியாது. தமிழ்க் கட்சிகள் இதனை அழுத்தமாகக் கூற வேண்டும்.

எக்கிய ராஜ்ஜியவுக்கு தயாராகக் காணப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது ஏன் 13அளித்த தூக்கிப் பிடிக்கிறார்? அதன்மூலம் அவர் இந்தியாவைத் தாக்காட்டலாம்; ஒரு பகுதி தமிழ்க் கட்சிகளைத் தாக்காட்டலாம்; அதன் மூலம் தமிழ் கட்சிகளுக்கு இடையே பிளவுகளை தாக்காட்டலாம்; அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையிலும் காலத்தை கடத்தலாம்; முடியுமானால் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அவரைப் பொறுத்தவரை 13ஐ முழுமையாக என்ற நிகழ்ச்சி நிரல் பல்பரிமாணங்களைக் கொண்டது. பல தரப்புகளைச் சமாளிக்க உதவுவது

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையில் அவர் எந்த ஒரு தேர்தலையும் வைக்கப் போவதில்லை. எந்த ஒரு திருப்பகரமான மாற்றத்திற்கும் துணியப் போவதுமில்லை. அவரைப் பொறுத்தவரை பொருளாதாரத்தை ஓரளவுக்கு நிமிர்த்தி, சிங்கள பௌத்த வாக்குகளை எப்படிக் கவர்வது என்பதுதான் இப்பொழுதுள்ள பிரச்சனை. அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் இந்தியாவை, தமிழ்க் கட்சிகளை, அனைத்துலக சமூகத்தை, ஐநாவை என்று பல்வேறு தரப்புகளையும் எப்படிச் சமாளிக்கலாம் என்று சிந்திக்கிறார். அதற்குத்தான் இந்த 13ஐ முழுமையாக என்ற நாடகம்.

எனவே ஒரு பகுதி தமிழ் கட்சிகள் 13 ஐ முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பது அவருக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் வியூகத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ ஒத்துழைக்கிறார் என்றுதான் கூறவேண்டும். விக்னேஸ்வரனை பொறுத்தவரை அவருடைய அரசியல் வாழ்வு இந்த நாடாளுமன்றப் பதவியோடு முடிந்துவிடும். அவரோடு சேர்ந்து அவருடைய கட்சியின் வாழ்வும் முடிந்துவிடுமா என்பதே இப்போதுள்ள கேள்வி. அவர் சம்பந்தரை எதிர்க்கும் ஒரு முதலமைச்சராக மேலெழுந்தபொழுது குறிப்பாக தமிழ்மக்கள் பேரவையில் ஓர் இணைத் தலைவராக பிரகாசித்த பொழுது, அவரை நோக்கி எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஒரு ஜனவசியம்மிக்க மாற்றுத் தலைமையாக மேலெழத் தேவையான ஒரு வாய்ப்பை வரலாறு அவருக்கு வழங்கியது; தமிழ் மக்கள் வழங்கினார்கள்: தமிழ் மக்கள் பேரவை வழங்கியது. ஆனால் அவர் எல்லாவற்றையுமே சொதப்பி விட்டார்.

2009க்கு பின்னரான தமிழ் அரசியலுக்கு அனைத்துலக அங்கீகாரத்தை வென்றெடுப்பதற்கு அவரை முன்னிறுத்தலாமா என்று சிந்தித்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் உலகில் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத, அல்லது குற்றவியல் கண்கொண்டு பார்க்கப்படும் ஓர் அரசியல் சூழலில், அவரைப் போன்ற ஒரு முன்னாள் நீதிபதியை முன்னிறுத்துவதன்மூலம் தமிழ் அரசியலுக்கு அனைத்துலக அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கலாம் என்று சிந்தித்தவர்கள் அவரை ஒரு மாற்றுத் தலைமையாக முன்நிறுத்தினார்கள். ஒரு மாற்று அரசியல் எனப்படுவது கோட்பாட்டு அடிப்படையில், பெரும்போக்காக காணப்படும் அரசியலுக்கு மாற்றானது.விக்னேஸ்வரன் அவ்வாறான மாற்று ஒழுக்கத்துக்குரியவர் அல்ல. ஆனால் அப்பொழுது பலமாகக் காணப்பட்ட கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைப்பதற்கு அவர் ஒரு பொருத்தமான மாற்றுத்தலைமையாக பார்க்கப்பட்டார் என்பதே உண்மை. குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவர் மீது எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

தமிழ் மக்கள் பேரவை எனப்படுவது நவீன தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு.சமூகப் பிரமுகர்களாகக் காணப்பட்டவர்களும் சிவில் சமூகங்களும் அரசியல் கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய கூட்டுச்சேர்க்கை . அதை நோக்கியும் எதிர்பார்ப்புகள் வளர்ந்தன. ஆனால் எல்லாவற்றையும் கஜேந்திரகுமார் மட்டுமல்ல விக்னேஸ்வரனும் சேர்ந்து சொதப்பிவிட்டார்கள். எனினும் கூட்டமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதன் ஏகபோகத்தை இழந்ததற்கு விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை என்பவற்றை மையப்படுத்திய அரசியலுக்குப் பெரிய பங்குண்டு.கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தது. ஆனால் அந்த இடத்தில் ஒரு மாற்று அணி உருவாக முடியவில்லை.

 

Tags: ரணில் விக்கிரமசிங்கதந்திரபலிக்குமா?தமிழர்கள் நிலை என்னவாகும்?
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் பூமிக்கடியில்உணவகம்.!

அடுத்த செய்தி

2006-இலங்கை விமானப்படை அட்டூழியம் – செஞ்சோலை 61 மாணவிகள் படுகொலை நினைவு நாள் …

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !
by Stills
27/06/2025
0

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக  தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த  23 வயதுடைய மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக் குள்ளாகி  உயிரை...

மேலும்...

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.
by Stills
27/06/2025
0

நேற்று வியாழக்கிழமை (26) இரவு 10.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் "குஷ்" போதைப்பொருளுடன் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரின்பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 130...

மேலும்...

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!
by Stills
16/06/2025
0

இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில்...

மேலும்...

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம்...

மேலும்...

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக தெரிவு.!

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக  தெரிவு.!
by Stills
16/06/2025
0

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது மேயராக தேசிய மக்கள்...

மேலும்...

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை...

மேலும்...
அடுத்த செய்தி
2006-இலங்கை விமானப்படை அட்டூழியம் – செஞ்சோலை 61 மாணவிகள் படுகொலை நினைவு நாள் …

2006-இலங்கை விமானப்படை அட்டூழியம் - செஞ்சோலை 61 மாணவிகள் படுகொலை நினைவு நாள் ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.