Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மருத்துவம்

கட்டிகளையே கரைக்கும்  எருக்கம்பால்.

Stills by Stills
25/08/2023
in மருத்துவம்
0
கட்டிகளையே கரைக்கும்  எருக்கம்பால்.
0
SHARES
441
VIEWS
ShareTweetShareShareShareShare

வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கே மருத்துவத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது. தேவர்களே என்றும் சிரஞ்சீவியாக பூலோகத்தில் செடிகள், மரங்கள், மூலிகைகள் வடிவில் வாழ்கின்றனர் என்கிற ஒரு கருத்து ஆன்மீக அன்பர்கள் பலருக்கும் இருக்கின்றது.

இலை நஞ்சு நீக்குதல், வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம்-கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களையுடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்குதல், முறைநோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது. பால் புண்ணுண்டாக்கும் தன்மை கொண்டது.
வெள்ளெருக்கம்பூ ஆஸ்துமா, மார்புச்சளி ஆகியவற்றுக்குச் சிறந்தது. குப்பை மேடுகளிலும் தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.  விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.
வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.  எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.
புதர்செடி வகையைச் சேர்ந்த வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லியிருக்கிறார்கள். சக்தி வாய்ந்த வெள்ளெருக்குச் செடியின் இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.
பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துகொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.
”எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் 
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான 
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம் 
உண்ணமுடியுமென ஓது”
வெள்ளெருக்கு செடியை பற்றி சித்தர்கள் கண்டுபிடித்த சித்த வைத்தியத்தில் மனிதர்களின் பல நோய்களை தீர்க்கம் ஒரு அற்புதமான விருட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இறையாற்றல் மிகுந்த இந்த வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் வளர்க்கலாமா அல்லது வேண்டாமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
எருக்கஞ்செடி என்பது ஒரு தெய்வீக மரமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மை கொண்ட ஒரு செடியாக இருக்கிறது. பொதுவாக செடிகள், மரங்கள் வளர்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஆனால் இந்த வெள்ளை எருக்கன் செடி 12 ஆண்டுகள் நீரின்றி இருந்தாலும் சிறப்பாக வளர்ச்சி அடையும் தன்மை கொண்ட ஒரு அபூர்வ செடி வகையாக இருக்கிறது.
பொதுவாக மரங்களில் இருந்து பால் போன்ற திரவம் வடியும் பால் வகை செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பது வாஸ்து சாஸ்திர ரீதியாக உள்ளது. எனினும் ஒரு சில அறிஞர்கள் இந்த வெள்ளை எருக்கன் செடி வீட்டிற்கு முன்பாக வளர்க்களாம் என கூறுகின்றனர்.
வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற வெள்ளை எருக்கன் செடி அந்த வீட்டிற்குள்ளாக துஷ்ட சக்திகள் மற்றும் தீய மாந்திரிக சக்திகள் நுழையாதவாறு தடுக்கும் ஆற்றல் மிக்க பாதுகாப்புக் கவசம் போல் செயல்படுகிறது. எனினும் சிவபெருமானின் அம்சம் கொண்டதாக கருதப்படுகின்ற வெள்ளருக்கன் செடியை முறையாக பராமரிப்பவர்கள், அந்தச் செடி வளரும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள், தங்களையும் தங்கள் வீடுகளையும் எப்போதும் சுத்தபத்தமாக வைத்துக் கொள்பவர்கள் மட்டுமே வீட்டுக்கு முன்பாக வளர்க்கலாம் என்றும், அப்படி இயலாதவர்கள் அத்தகைய செடிகளை சிவபெருமான் கோவில் நந்தவனங்களில் நட்டு வைப்பதே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த வெள்ளை எருக்கன் செடியை வீட்டிற்கு முன்பாக வளர்க்க இயலாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் அல்லது உங்களுக்குத் தெரிந்த சித்த வைத்தியரிடம் கூறி வெள்ளெருக்கன் வேர் கட்டை ஒன்றை வாங்கி, உங்கள் வீட்டுற்கு முன்பாக கட்டி தொங்கவிடுவதாலும் அல்லது உங்கள் வீட்டின் வாயில் அருகில் வைத்து விடுவதாலும் எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து வீட்டில் உள்ளவர்களின் வாழ்வில் சுபிட்சங்களை உண்டாக்கும்.
Tags: எருக்கம்பால்கட்டிகளை கரைக்கும்வெள்ளெருக்கு செடி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

சிறந்த தமிழ் திரைப்படமாக “கடைசி விவசாயி” தேசிய விருது வென்று சாதனை .. விருது வாங்குவதற்கு முன் இறந்து போன விவசாயி…

அடுத்த செய்தி

சிறுநீரகம் பழுதடைந்துள்ளதை கண்டறிவது எப்படி?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!
by Stills
12/12/2025
0

உறக்கத்திற்கு ஏற்ற திசைகள். ஆயுர்வேதத்தில் முக்கோண அமைப்பில் ஆரோக்கியத்திற்கான மூன்று தன்மைகள் உள்ளன. அவை, உணவு ,சமச்சீர் வாழ்க்கை , தூக்கம் என்பன. நிம்மதியான தூக்கத்திற்கு மிகுந்த...

மேலும்...

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!
by Stills
17/10/2025
0

இருமல் மற்றும் சளி போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். சளி, இருமலை முன்னர் யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. சளிக்கென்று வீட்டு மருத்துவம் செய்து கொண்டு சளியை சரி...

மேலும்...

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
by Stills
24/05/2024
0

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

மேலும்...

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
by Stills
24/05/2024
0

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

மேலும்...
அடுத்த செய்தி
சிறுநீரகம் பழுதடைந்துள்ளதை கண்டறிவது எப்படி?

சிறுநீரகம் பழுதடைந்துள்ளதை கண்டறிவது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

12/12/2025
இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!

இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!

12/12/2025
“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!

“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!

11/12/2025
2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!

2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!

11/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.