Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

2023 ODI உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்.

Stills by Stills
08/09/2023
in இந்தியா
0
2023 ODI உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்.
0
SHARES
14
VIEWS
ShareTweetShareShareShareShare

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.  தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. தற்போது பிசிசிஐ இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது.

பிசிசிஐ தலைமைச் செயலாளர் ஜெய் ஷா உலகக்கோப்பை மட்டைப்பந்து போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார் . பிசிசிஐ இதைத் தனது எக்ஸ்  தளத்தில் தெரிவித்துள்ளது. கோல்டன் டிக்கெட்டை சச்சினுக்கு ஜெய் ஷா வழங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

“கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஐகானிக் நபர்களை பிசிசிஐ ஒருநாள் உலகக்கோப்பைக்கு அழைப்பு விடுத்து வருகிறது

கோல்டன் டிக்கெட் என்றால் என்ன?

கோல்டன் டிக்கெட்என்றால் சில நபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருந்தினர் பாஸ் ஆகும். இதன் மூலம் அவர்கள் உலகக் கோப்பை போட்டிகளுக்கு விஐபி அணுகலைப் பெறுகிறார்கள். இந்தியாவின் பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட ஐகானிக் நபர்களை அழைக்கும் விதமாகவும், உலகக்கோப்பையை சிறப்பானதாக மாற்றும் விதமாகவும் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. அனேகமாக, பிசிசிஐ மற்ற துறைகளில் உள்ள பல்வேறு ஐகான்களுக்கும் இதே போன்ற பாஸ்களை வழங்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

யார் யாருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது?

“கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டவர்களில் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது நபராகும். இதன் தொடக்கமாக கடந்த செவ்வாய் கிழமை அன்று பாலிவுட் சூப்பர் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜெய்ஷா முதல் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். தற்போது வரை அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் என இரண்டு நபர்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோல்டன் டிக்கெட் மூலம், அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போல கோல்டன் டிக்கெட் பெறுபவர்கள் அனைத்து போட்டிகளையும் ஒவ்வொரு மைதானத்திலும் உள்ள விஐபி பெட்டிகளில் இருந்து மற்ற வசதிகளுடன் கண்டுகளிக்கலாம்.

இந்நிலையில் நடக்கவிருக்கும் ஒவ்வொரு போட்டியையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ “கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இந்திய ஸ்டார்களை போட்டியைக் காண அழைப்பு விடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமையான இன்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் பாரத ரத்னா வென்றவருமான சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா. இதனை தங்களுடைய அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் பிசிசிஐ, “நாடு மற்றும் கிரிக்கெட்டிற்கு இது ஒரு தனித்துவமான தருணம். கிரிக்கெட்டின் தலைசிறந்தவரும், நாட்டின் பெருமைக்கான சின்னமாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் “கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இணைகிறார். வளரும் இளம் தலைமுறைக்கு உத்வேகமாக இருந்துவரும் சச்சின் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 2023 ஒ.டி.ஐஉலக கோப்பைகோல்டன்டிக்கெட்.
ShareTweetShareShareSendSend
Previous Post

மரண அறிவித்தல்-திருமதி பவானி முருகமூர்த்தி

Next Post

இயக்குநரும்,  நடிகருமான மாரிமுத்துவின் 30 வருட சினிமா பயணம்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
by Stills
21/01/2026
0

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று திடீ முடிவுரென தனது நிலைப்பாட்டை மாற்றி 'அதிமு வுடன் இனி சேரப்போவதில்லை' என்று  அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த...

Read more

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!
by கண்ணன்
19/12/2025
0

ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இணைந்த நாஞ்சில் சம்பத் மேடையிலோ, விஜய்யின் பேச்சிலோ இடம்பெறாதது...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more
Next Post
இயக்குநரும்,  நடிகருமான மாரிமுத்துவின் 30 வருட சினிமா பயணம்.!

இயக்குநரும்,  நடிகருமான மாரிமுத்துவின் 30 வருட சினிமா பயணம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us