உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.145 நாடுகளில் உள்ள இராணுவத்தின் பலம் பலவீனங்களை ஆய்வு செய்து, குளோபல் ஃபையர்பவர் இந்த ஆண்டுக்கான வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் அதிக சக்தி வாய்ந்த இராணுவ படை கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. வலிமையான இராணுவம் கொண்ட நாடுகளில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன. நான்காவது இடத்தில் இந்தியாஇடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த ஐக்கிய அமீரகம், இந்த ஆண்டு 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.கடந்த ஆண்டு 6ஆம் இடத்தில் இருந்த தென் கொரியா, இந்த ஆண்டும் அதே இடத்தில் இருக்கிறது.9 ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் இராணுவம், இந்த ஆண்டு 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டு இருந்த இடங்களில் இருந்து ஜப்பான் 8 ஆம் இடத்திலும், பிரான்ஸ் 9 ஆம் இடத்திலும் சரிந்துள்ளன.10 வது இடத்தில் இத்தாலி இடம்பெற்றுள்ளது.
வலிமையான இராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது, பூட்டான்.
பலவீனமான இராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சோமாலியா, மத்திய ஆபிரிக்கா, மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.