தாய் மண்ணிற்கும் தாயக உறவிற்கும்
தன்னுயிரை ஈகம் செய்த தியாகசெம்மல்கள்!!!
உயிரைத் துச்சமாக எண்ணித் துடித்தனர்!
உயர்வாய் நேசித்து எம் நாட்டைக் காத்தனர்!
மாவீரர்களே!!!
உங்களுக்கு மரியாதை
செய்யக் கூட
உரிமையில்லாத கொடும்
தேசத்தில் பிறந்தேனா?
எம் ஈழத்தின் தமிழின உறவை
தண்டிக்கும் போது
தசையெல்லாம் துடிக்கிறது
குருதி கொதிக்கிறது!
மனிதம் எங்கே…?
மடிந்து கிடக்கிறது
மாக்கள் மத்தியிலே
மக்களினம் மடிகிறதே!
தமிழினத்திற்கும்
தாயக தேசத்திற்கும்
என்று விடிவு
பிறக்கும் என்றே
நெஞ்சமோ ஏங்கி தவிக்கிறது!
அபிராமி கவிதன்✍️