Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய அணி தங்கத்தைக் கைப்பற்றியது.!

Stills by Stills
25/09/2023
in இந்தியா
0
இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய அணி தங்கத்தைக் கைப்பற்றியது.!
0
SHARES
13
VIEWS
ShareTweetShareShareShareShare

சீனாவின் ஹாங்சோவில் கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிரிக்கெட்டும் இடம்பெற்றது. அதேநேரத்தில், தரவரிசைப் பட்டியலில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. எனினும் இந்தோனேசியா, மங்கோலியா, மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடின.19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று (செப். 25) நடைபெற்றது. இதில், டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் குவித்தது. இதில், ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனைகளில் சமரி அத்தப்பட்டு மட்டும் 12 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அனுஷ்கா சஞ்சீவனி 1 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விஷ்மி குணரத்ன டக் அவுட்டில் வெளியேறினார். இதையடுத்து ஹசினி பெரேரா மற்றும் நிலாக்‌ஷி டி சில்வா இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். எனினும், அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பெரேரா 25 ரன்களில் ஆட்டமிழக்க, டி சில்வா 23 ரன்களில் வெளியேறினார்.

ஓஷதி ரணசிங்க 19 ரன்கள் சேர்த்தார். இறுதியாக, வந்த வீராங்கனைகளும் பெரிதாக சோபிக்கத் தவறினால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலமாக இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கத்தை வென்றுள்ளது. மேலும், இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய – இலங்கைகிரிக்கெட்மகளிர் அணி
ShareTweetShareShareSendSend
Previous Post

சந்திரயான் 3 ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!

Next Post

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!தியாக தீபம் அணைந்தது…

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!தியாக தீபம் அணைந்தது…

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!தியாக தீபம் அணைந்தது...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us