Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது …..

Stills by Stills
14/10/2023
in இந்தியா
0
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது …..
0
SHARES
104
VIEWS
ShareTweetShareShareShareShare

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர்.

சிங்களம், தமிழில் வணக்கம் சொன்ன பிரதமர்: 

கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா – இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துரை – இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல்.

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்” என்று கூறினார். இந்தியா – இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.

நாகையிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்ல இந்திய ரூ.7,670 கட்டணமாகும். தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) டிக்கெட் விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்குவர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும்.

150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.

நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பகல் 12 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.

Tags: இந்தியாஇலங்கைகப்பல் சேவைகாங்கேசன்துறைநாகை
ShareTweetShareShareSendSend
Previous Post

நாமல் ஜனாதிபதி-மகிந்த விருப்பம்

Next Post

நாஜிப்படை போன்ற தாக்குதலை அனுமதிக்க முடியாது; புடின் கடும் எச்சரிக்கை.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post
நாஜிப்படை போன்ற  தாக்குதலை அனுமதிக்க முடியாது; புடின் கடும் எச்சரிக்கை.

நாஜிப்படை போன்ற தாக்குதலை அனுமதிக்க முடியாது; புடின் கடும் எச்சரிக்கை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us