ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஶ்ரீலங்கன் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க முடியாது எனவும்,நிறுவனத்தின் 49% பங்குகளை வேறு தரப்பினருக்கு மாற்றி கூட்டு முயற்சியாக நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேசமயம் , ஏயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.