ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி 23 வயதுடைய பெண் கொழும்பு அம்பலாங்கொடை உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் வியாழன் மாலை அம்பலாங்கொடை கடற்கரையில் தனியாக சென்று அமைதியான கடற்கரை அமைப்பை அனுபவித்துக்கொண்டிருந்த போது அவர் மீது அடையாளம் தெரியாத ஒரு நபர் திடீரென பாய்ந்ததில் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன் அதிர்ச்சியான நிலைக்கு சென்றுள்ளார்.
அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தாக்குதல் நடத்திய நபர் எதிர்பாராதவிதமாக தன்னை அணுகி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார். அதைத் தொடர்ந்து தப்பிக்க நடந்த போராட்டத்தில், தனது மார்பு பகுதியில் கடித்த காயம் இருந்ததாக தெரிவித்தார். உடனடியாக ஹோட்டல் நிர்வாகம் மருத்துவ உதவிவழங்கி அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்தது .இதற்கிடையில், அம்பலாங்கொடை காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்வதற்கான முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அவர்கள் தற்போது பாதுகாப்பு காட்சிகளை மதிப்பாய்வு செய்து, சம்பவங்களை ஒன்றிணைத்து சந்தேக நபரை அடையாளம் காண விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.