சிரிய தலைநகரில் இடம்பெற்ற விமானதாக்குதல் தாக்குதலொன்றில் ஈரானின் நான்கு சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. சிரிய தலைநகருக்கு தென்மேற்கில் உள்ள மசே பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்தும் விமானநிலையமொன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கியநாடுகள் அலுவலகமும் தூதரகங்களும் இந்த பகுதியிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.பாரிய வெடிப்புச்சத்தங்களை கேட்டதாகவும் புகைமண்டலத்தை அவதானித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கனடா அமெரிக்காவுடன் இணையுமா?
கனடா அமெரிக்காவுடன் இணைப்பது உண்மையா? பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கு ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தீவிர ஆர்வம்...
மேலும்...