தமிழ் திரையுலக இசைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி வயது47 . கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும் உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நேற்று (25) கொழும்பில் காலமானார். இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள லங்கா வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு எடுத்து செல்லப்பட்டு வைக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் இன்று காலை இந்தியாவிற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று காலை கொழும்பு நோக்கி வருகைத் தந்திருந்தனர்.
உடல் இன்று சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ள நிலையில் தற்போது அவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது.
கொழும்பில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) ஆகிய தினங்களில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் இசைஞானி இளையராஜாவி இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,”நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்.எங்கு சென்றாலும் என்னிசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது.
இலங்கை தமிழர்களில் எனக்கு இரசிகரில்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே.அதுவே எனக்கு போதும்.இது கடவுள் கொடுத்த வரம்.” என கூறியுள்ளார்.
திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் காரணமாக நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
யாவரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்