அமுக்கரா மாத்திரை அல்லது சூரணம் மனதை அமைதிப்படுத்தி, உறக்கத்தை வரவழைக்கும் அற்புதமான சித்த மருந்து. மருந்து என்று வரும்போது, அதுவும் நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டிய சூழல் இருப்பின் சுயமாக எடுக்காமல், ஒரு மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது.
உங்களைப் பரிசோதிக்கும் மருத்துவர், தேவைப்படும் மருந்திற்கான நாள் கணக்கு, மருந்தின் அளவு போன்றவற்றை முறைப்படுத்திக் கொடுப்பார். சித்த மருந்துகள் போன்ற இயற்கை மருந்துகளாக இருப்பினும் நீண்ட நாள் என்று வரும் போது, மருத்துவரின் மேற்பார்வை முக்கியம்.
அஞ்சறைப் பெட்டி பொருள்களை வைத்தோ, மூலிகைகளை வைத்தோ, பாரம்பர்யமாக நாம் பின்பற்றும் எளிய மருந்துகளை பற்றி அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் நாள்கணக்காக மருந்துகளின் தேவை இருப்பின் மருத்துவர் ஆலோசனையோடு மருந்துகளை எடுப்பதே சிறந்தது. மூளையின் நரம்புகளைப் பாதுகாக்கும் அமுக்கராவின் ஆற்றல் குறித்து ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.வயோதிகத்தில் ஏற்படக்கூடிய மறதியைத் தள்ளிப்போடும் ஆற்றலும் அமுக்கராவிற்கு உண்டு.
சீமை அமுக்கரா:
இதிலிருக்கும் ‘விதனலாய்டு’ எனும் வேதிப்பொருளுக்கு மனப் பதற்றத்தைக் குறைக்கும் தன்மையும் இருக்கிறது. அமுக்கரா அற்புதமான மருந்து என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உங்கள் உடலில் தேவைக்கேற்ப, குறிகுணத்தின் தன்மைக்கு ஏற்ப சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது சிறப்பு!
சித்த மருத்துவத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம், உடல் வன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் காயகற்பமாகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், அமுக்கரா சூரண மாத்திரை சிக்குன்குனியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற வைரஸ் நோய்களினால் ஏற்படும் உடல் வன்மைக் குறைவை சரிசெய்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த அமுக்கரா சூரண மாத்திரையை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாலில் தினசரி இரு வேளை எடுத்துக் கொள்ளலாம் எனவும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊற இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்களும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் எனவும், இந்த மாத்திரை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை பெறுவதால் தொடர்ந்து இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் எனவும், நீரிழிவு, இரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வோரும் இந்த சூரணத்தை எடுத்து கொள்ளலாம் .