பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.மத்திய வங்கியின் அலுவலர்களின் சேமலாப நிதியத்தின் கணக்கு மீகுதிகளுக்கு 2022 ஆம் ஆண்டு 29.27 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்கு மீதிக்கென 9 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வட்டி வீதங்களுக்கு இடையில் வித்தியாசம் பேணப்படுவதற்கான காரணம் என்ன என்று பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க நிதி இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.நாட்டு மக்களின் இறுதி சேமிப்பை சூறையாடி அதனுடாக பொருளாதார மீட்சிப் பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுவது கவலைக்குரியது.
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சேமலாப நிதியத்தின் கணக்கு மிகுதிக்கென 2022 ஆம் ஆண்டு 29.27 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்கு மிகுதிக்கென கடந்த ஆண்டு (2022) 9 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கணக்கு மிகுதிக்கென 8.75 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிதியங்களின் கணக்கு மிகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வட்டி வீதங்களுக்கு இடையே பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது.
மத்திய வங்கியின் சேவையாளர்களின் கணக்குகளுக்கு 29.27 சதவீத வட்டி வழங்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் உழைக்கும் மக்களின் சேமலாப நிதிய கணக்குகளுக்கு 9 சதவீத குறுகிய வட்டி வழங்கப்படுவது எந்தளவுக்கு நியாயமாகும். எதிர்காலத்தில் இந்த 9 சதவீத வட்டி வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.