பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகரும் தே.மு.தி.க.தலைவருமான விஜயகாந்த் (71)இன்று வியாழக்கிழமை (டிசம்பர்28) காலை காலமானார்.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் 150ற்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டவர்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலபிரச்சனையால் அவதிப்பட்டுவந்தார். இதனால் பொதுவெளி நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதிகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.