நேற்று புதன்கிழமை (04) லெபனான் இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான ஈ.கே – 648 மூலம் நேற்றைய தினம் இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இவர்களில் 05 பிள்ளைகளும் 03 பெண்களும் 19 ஆண்களும் இதுவரை லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த சுமார் 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.