பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. இக்கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் முன்னைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் குறித்த கொடுப்பனவு 7ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படஇருந்ததாகவும் இந்நிலையில் பத்தாயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார். நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவர் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு
இலங்கையில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry...
மேலும்...