2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்த அதர்வாவின்‘தணல்’திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ளதிரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அதர்வா ‘பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ‘இதயம் முரளி’ படத்தை
தன் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் ‘தணல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அஸ்வின், லாவண்யா,
பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ள இத்திரைப்படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.