தினம் ஒரு திருக்குறள் நிகழ்வினை காணொளி வாயிலாக வழங்கி வருகின்ற கவிதனின் 800 வது குறள் காணொளி இன்று வெளி வந்துள்ளது. 800 குறள்களை காணொளி களாக வெளியிட்ட கவிதனுக்கு ‘தொடரும்’ நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது. அதே நேரம், கவிதன் மூதுரை மனனப்போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களை பெற்றுள்ளார். அது தொடர்பாக வெளி வந்துள்ள வாழ்த்து செய்தியினையும் இங்கே இணைத்துள்ளோம்.
வணக்கம்! வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் உலகத் தமிழ்க் கூடல், வையைத் தமிழ்ச் சங்கம், நற்றமிழ் புலனம் சார்பாக வணக்கம்.
மூதுரை மனனப் போட்டியில்
பங்கெடுத்து,முதல் பரிசு பெற்ற செல்வன். கவித் கவிதாசனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!
இன்று நடைபெற்ற பன்னாட்டு மாணவர்கள் “மூதுரை மனனப் போட்டியில்” உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் பங்கெடுத்தனர்.
அவர்களுள் ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து கலந்து சிறப்பித்த இளங்கவிஞர்
திரு. கவித் கவிதாசனுடைய ஆற்றல் வியப்பூட்டியது. அருமை!
தெளிவான, நேர்த்தியான, கணீரென ஒலித்த அவர் குரல் காந்தம் போல் அனைவரையும் ஈர்த்தது.
உருவும்,ஆற்றலும்
தேவி திருப்பாலுண்ட திருஞான சம்பந்தரை எண்ண வைத்தது!
விளையும் பயிர் முளையிலேயே தெரியுமன்றோ! செல்வன் கவித் கவிதாசனுக்கு ஒளிமயமான எதிர்காலம்
உள்ளது. புலம் பெயர்ந்தாலும் தமிழ் அப்படியே அருமையாக வருகிறது. இன்னும் நிறைய உணர்ந்து படிக்கவும்.
பெற்றோருக்கும், கவித் கவிதாசனுக்கு கற்றுத் தந்தோருக்கும்
வாழ்த்துக்கள்! பரிசு தகுதி உடையவருக்கே கிடைத்துள்ளது. அருமை!
நன்றி வணக்கம்! படிப்பிலும் முதலாக வெற்றிட வாழ்த்துக்கள்!
க.இராசேந்திரன்
திருச்சி.