புதிய சமூக புலனாய்வுப் பிரிவுஎனும் பெயரில் தேசிய புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை வகுப்புகளில் இடம்பெறும் பல்வேறு சீர்கேடுகளைத் தடுக்கப் புதிய புலனாய்வு பிரிவின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளோம். இதன்படி, பாடசாலைகளில் இடம்பெறும் தவறான செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களை குறைப்பதற்கும் அவற்றை ஒழிப்பதற்கும் இந்தப் புதிய புலனாய்வுப் பிரிவு செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.