விராட் கோலி
டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வருகிறது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் ஆடிவரும் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது.
தொடர்ந்து, 36 ரன்களுடன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,515 ரன்களை குவித்து சேவாக்கின் சாதனையை முந்தியுள்ளார்.
புதிய சாதனை
முன்னதாக, முதலிடத்தை பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்கள் குவித்துள்ளார். ராகுல் டிராவிட் 13,265 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், விவிஎஸ் லட்சுமண் 8,781 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில், கோலி டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்கள் மற்றும் 28 அரை சதங்கள் அடித்து 5வது இடத்தில் உள்ளார்.