இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் கடந்த 20ஆம் திகதி முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளது.
ஆசிய கிண்ண இறுதிப் போட்டிகளில் இலங்கை அணியின் படுதோல்வி குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. வலிமையான பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி இறுதிப்போட்டியில் எவ்வாறு 50 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது என்ற கேள்வி இலங்கை இரசிகர்கள் மாத்திரமின்றி இந்திய இரசிகர்களுக்கும் எழுந்த ஒன்று.
மேலும் இத்தொடரின் சூப்பர் 4 போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி. 12 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ். இந்த நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டத்தின் பின்னணியில் சூதாட்ட சம்பவங்கள் இருக்குமா என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. அதை விட இந்திய அணியின் பந்து வீச்சாளர் சிராஜ், தனக்குக் கிடைத்த ஆட்ட நாயகன் விருதுத்தொகையை இலங்கையின் மைதான பராமரிப்பாளர்களுக்கு வழங்கியமையை சந்தேகக் கண் கொண்டு நோக்கியுள்ளார்,