Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு உலகம்

ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்.!

Stills by Stills
14/08/2023
in உலகம்
0
ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்.!
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

 உலகம் முழுவதும் இரு மனங்களை இணைக்கும் வலுவான சக்தி காதலுக்கே உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், எந்தக் காதலும் இனம், மதம், மொழி பார்ப்பது அல்ல. அதனால்தான் இன்றளவிலும் காதல், அனைத்து எல்லைகளையும் வேறுபாடுகளையும் வரையறைகளையும் தாண்டி நிற்கிறது. பல காதலர்களை வாழவைத்தப்படி இருக்கிறது..

மலேசியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில் அதிபர் கூ கே பெங். மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவராகவும் உள்ளார். கூ கே பெங் 2015 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44வது இடத்தைப் பிடித்தார். அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் (ரூ. 2,484 கோடி) அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய மனைவி பாலின் சாய். இவர் முன்னாள் மிஸ் மலேசியா அழகியாவார். இவர்களின் ஒரே மகள் ஏஞ்சலின் ஃபிரான்சிஸ்.
இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஏஞ்சலின் ஃபிரான்சிஸ், தனது காதலைப் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காதலர் பற்றிய தகவல்களை அறிந்த ஏஞ்சலின் குடும்பத்தினர், அவருடைய காதலை ஏற்க மறுத்துள்ளனர். பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களைக் காட்டி, ஏஞ்சலின் காதலை அவரது தந்தை புறக்கணித்ததுடன், காதலை கைவிடும்படியும் எச்சரித்துள்ளார்.ஆனால், ஏஞ்சலின் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். மணந்தாலும், இறந்தாலும் அது காதலர் ஜெடிடியாவோடுதான் என்ற உறுதியில் இருந்தார். அதுதானே உண்மையில் காதல்! பணத்தைப் பார்த்து வருவதா காதல், மனத்தைப் பார்த்து வருவதுதானே காதல்? அதைத்தானே உலக காவியங்கள் எடுத்துரைக்கின்றன.

காதல் விஷயத்தில் பிடிவாதமாக இருந்த ஏஞ்சலின், ’நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வோம்’ எனவும் தந்தையிடமும் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை – மகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தந்தை – மகள் இடையே நிலவும் பாசம் என்பதே அழகானது; அதிசயமானது. ஆனால், அதையே காதலருக்காக விடும்போது, அதைவிடக் கொடுமை வேறெதுவும் இல்லை. காரணம், பாசத்தைவிட அங்கே காதல் சிறந்ததாக தெரிகிறது. அதிலும் உண்மைக் காதல், உயர்ந்தாக இருக்கிறது. உண்மைக் காதலுக்கு எந்த தியாகத்தையும் செய்யலாம் என்கிற நோக்கில் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்தார் ஏஞ்சலின்.

பேணிக்காத்து வளர்த்தெடுத்த பெற்றோரையும், பெயர் சொல்லுமளவுக்கு பிரபலமாக விளங்கிய சொத்துகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, அந்த ஒற்றை உயிருக்காக வீட்டைவிட்டு வெளியேறினார், ஏஞ்சலின். அவர், தாம் விரும்பிய காதலரை எந்த நிலையிலும் கைவிடாது உறுதியளித்தப்படியே கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி, இறக்கை விரித்து இனிய பொழுதுகளை இத்தனை ஆண்டுகளாய்க் கழித்துவரும் வேளையில், அவர்களுடைய காதல் கதை வெளியுலகுக்குத் தெரியவந்ததே ஏஞ்சலின் பெற்றோரால்தான்.

அவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அவர்களது அழகான குடும்பக் கதையை எடுத்துரைத்தார். தந்தை தொழிலை கவனித்த நிலையில் குடும்பத்தை தாய் கவனித்ததாகக் கூறி மலரும் நினைவுகளைப் பகிர்ந்தார். தந்தை பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்தபோது, குடும்பத்தை பார்த்துக்கொண்ட தனது தாய்க்கு ஆதரவாக ஏஞ்சலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர்கள் மீண்டும் ஒன்றாக சேருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேளையில்தான், ஏஞ்சலினின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. தனது குடும்பத்தின் ரூ.2,484 கோடி சொத்தை புறம்தள்ளி காதலனை கரம்பிடித்த தகவல் உலா வந்து உலகையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பேசுபொருளாகி இருக்கிறது. இதனால், ஏஞ்சலின் உலகம் முழுவதும் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறார்.
Tags: 2484 கோடிசொத்துகாதலனை கரம்பிடித்த இளம்பெண்.!மலேசியா
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…

அடுத்த செய்தி

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.
by Stills
24/06/2025
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர்...

மேலும்...

டி20 மகளிர் உலககோப்பை அட்டவணை வெளியீடு

டி20 மகளிர் உலககோப்பை அட்டவணை வெளியீடு
by Stills
19/06/2025
0

லண்டன் 2026 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது அத்தியாயம் முழு அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 24 நாட்கள் நடைபெறவிருக்கும்...

மேலும்...

கனடா அமெரிக்காவுடன் இணையுமா?

கனடா அமெரிக்காவுடன் இணையுமா?
by Stills
11/02/2025
0

கனடா அமெரிக்காவுடன் இணைப்பது உண்மையா? பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கு ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தீவிர ஆர்வம்...

மேலும்...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிகை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிகை!
by Stills
11/02/2025
0

சனிக்கிழமை மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் இஸ்ரேல் ஹமாசுடனான யுத்த நிறுத்தத்தை கைவிடவேண்டும் என  டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும்...

மேலும்...

குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை -அமெரிக்கா ஜனாதிபதி-சிஎன்என்

குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை -அமெரிக்கா ஜனாதிபதி-சிஎன்என்
by Stills
18/01/2025
0

அமெரிக்காவின் ஜனாதிபதியாக  டொனால்ட் அமெரிக்கா ஜனாதிபதி பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான...

மேலும்...

“சும்மா இருந்து ” பணம் சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர் : கடந்த ஆண்டு 2.4 கோடி வருமானம் .

“சும்மா இருந்து ” பணம் சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர் : கடந்த ஆண்டு 2.4 கோடி வருமானம் .
by Stills
09/01/2025
0

ஜப்பான் நாட்டில் வினோதமான முறையில் சம்பாதிக்கும் இளைஞர்.  நமது நாட்டில் ஒரு வேலை கிடைத்து அதில் செட்டிலாவது என்பதே இளைஞர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால்,...

மேலும்...
அடுத்த செய்தி
நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

17/10/2025

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.