புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் அரிய கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள். அவர்கள் கண்டுபிடித்த நானோ துகள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. இதையடுத்து பலரும் பேராசிரியர்களை பாராட்டி வருகிறார்கள்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி பணியாற்றி வருகிறார். இதே போல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.
தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பு…
முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீரர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் நினைவு கூறப்பட்டுபட்டு வருகின்றது.